கேரளா எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
அதனையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழாக்கப் படுத்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது…
“நீண்ட காலமாகவே ED எனது வீட்டில் சோதனை நடத்த விரும்பியது. இந்த சோதனை சிலருக்கு, குறிப்பாக ராகுல் காந்தி போன்றவர்களுக்கு பெரும் திருப்தியைத் தரும் என்று நினைக்கிறேன். பினராயி விஜயனின் வீடு ஏன் சோதனையிடப்படவில்லை, ஏன் கைது செய்யப்படவில்லை என ராகுல் காந்தி கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தார்.
பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு எதிராக நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் எழுந்துள்ளன.
தங்களைத் தவிர மற்ற கட்சிகளுக்கு எதிராக ED-வின் ஊடுருவலும் நடவடிக்கைகளும் தொடர வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைப்பாடாக உள்ளது.
இவை எதுவும் எங்களை பயப்படுத்தப் போவதில்லை. இதை நாங்கள் ஒரு தொடக்கமாக மட்டுமே பார்க்கிறோம். இத்தகைய நடவடிக்கைகள் எங்களை அழித்துவிடும் என்று யாரும் நினைக்கக் கூடாது.
உள்ளூர் மக்களின் மற்றும் கட்சித் தோழர்களின் உணர்வுகள் இங்கு வெளிப்பட்டுள்ளது. எதிரிகள் என்னைத் தாக்கத் தயாராகும் போதெல்லாம், கட்சியின் வலுவான ஆதரவை நான் பெற்றேன்.
இன்று தோழர்கள் நிரூபித்திருப்பது என்னவென்றால், அந்த ஆதரவில் எந்தக் குறைவும் இல்லை என்பதுதான். இதுதான் எங்கள் வலிமை. அனைத்து சோதனைகளையும் ஒன்றிணைந்து எதிர் கொள்வோம்”.
"நீண்ட காலமாகவே ED எனது வீட்டில் சோதனை நடத்த விரும்பியது. இந்த சோதனை சிலருக்கு, குறிப்பாக ராகுல் காந்தி போன்றவர்களுக்கு பெரும் திருப்தியைத் தரும் என்று நினைக்கிறேன். பினராயி விஜயனின் வீடு ஏன் சோதனையிடப்படவில்லை, ஏன் கைது செய்யப்படவில்லை என ராகுல் காந்தி கேள்வி எழுப்பிக்கொண்டே… pic.twitter.com/Q2NkHIITOu
— CPIM Tamilnadu (@tncpim) May 27, 2026




