14
May, 2026

A News 365Times Venture

14
Thursday
May, 2026

A News 365Times Venture

மகளிர் உரிமைத் தொகை: "ரூ.2500-னு சொல்லிட்டு ரூ.1000கூட தராம இழுத்தடிக்கிறது…"- ஸ்டாலின் கண்டனம்

Date:

2021-2026 தி.மு.க ஆட்சிக் காலத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 அவர்களது வங்கித் தொகையில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வந்தது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதியில், தமிழக வெற்றிக் கழகம் இத்தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக அறிவித்திருந்தது. தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச. ஜோசப் விஜய், இத்திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 1,000 உரிமைத்தொகையை மறுசீரமைப்பு செய்ய அரசுக்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைமுறையில் உள்ள திட்டத்தின்படி மே 2026 மாதத்திற்கான உரிமைத்தொகை (ரூ. 1,000) விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின்

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கேரள முதல்வர் பதவிக்கு வி.டி.சதீசன் தேர்வு; 10 நாள்கள் இழுபறி முடிவுக்கு வந்தது!

கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில்...

திமுக: “தோல்விக்கு நானே பொறுப்பு; சுனாமி பேரழிவு இது; மிகப்பெரிய மாற்றத்தை.!" – ஸ்டாலின் முழு உரை

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்...

"அந்த சோஃபா ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட ஒன்று!" – உதயநிதி விமர்சனம் குறித்து திருமா

த.வெ.க தரப்பில் சோஃபா செல்கிறது. அதன்பிறகு முதல்வரும் செல்கிறார் என்று எதிர்கட்சித்...

`விஜய் என்னை காப்பாற்றாமல் விடுவாரா?' – எஸ்.காமராஜின் சட்டமன்ற பல்டியும் பின்னணியும்!

சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியாகி த.வெ.க தலைமையில் மே 10-ம் தேதி...