6
November, 2026

A News 365Times Venture

6
Friday
November, 2026

A News 365Times Venture

போராடும் மீனவர்கள்; மனம் மாறாத முதல்வர் விஜய்? – பட்டினப்பாக்கத்தில்தான் புதிய தலைமைச் செயலகம்!

Date:

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடலுக்கே அருகே புதிய தலைமைச் செயலகத்தை கட்ட மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், இன்றைய தேதி வரைக்கும் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டியே ஆக வேண்டுமென முதல்வர் விஜய் உறுதியாகவே இருப்பதாக தலைமைச் செயலகத்தின் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கிசுகிசுக்கின்றனர்.

போராடிய மீனவர்கள்

பட்ஜெட் கூட்டத்தொடரில் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டப் போவதாக முதல்வர் விஜய் அறிவித்தார். அடுத்த சில நாட்களிலேயே பட்டினப்பாக்கத்தில் கடலுக்கு அருகே இருக்கும் சுமார் 25 ஏக்கர் நிலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டது.

மீனவ கிராமத்துக்கு மத்தியில் புதிய தலைமைச் செயலகம் அமைவதை அங்கிருக்கும் 12 மீனவ கிராமத்தினரும் விரும்பவில்லை. குறிப்பிட்ட அந்த இடத்தில் மீனவர்கள் குடியிருப்பு கட்ட வேண்டி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதை நிறைவேற்றாமல் புதிய தலைமைச் செயலகம் என அரசு இறங்குவது மீனவர்களை கோபப்படுத்தியிருக்கிறது.

CM Vijay
CM Vijay

மேலும், அங்கே தலைமைச் செயலகம் அமைந்தால் தங்களின் மீன்பிடி தொழிலே பாதிக்கப்படும் என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். அரசைக் கண்டித்து தங்களின் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மீனவ கிராம மக்கள் எல்லாரும் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தனர். இந்த வாரத்தில் கூட அரசு முறையாக கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தாமல் போக்கு காட்டுவதாக கண்டனம் தெரிவித்தனர். அதுதொடர்பாக நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும், ‘பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்துக்காக அரசு ஒரு பிடி நிலத்தை கையிலெடுத்தாலும் மீனவ கிராமங்கள் அத்தனையும் போராட்டத்தில் இறங்குவோம்’ என்றனர்.

பட்டினப்பாக்கம் விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என கோட்டையில் முதல்வருக்கு நெருக்கமான சீனியர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம், ‘பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தை கட்ட வேண்டும் என்பதை மனதில் வைத்துதான் முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார். இன்றைய தேதி வரைக்கும் பட்டினப்பாக்கத்தில் மட்டுமே தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்பதில் முதல்வர் தரப்பு அப்படியே உறுதியாக இருக்கிறது. பட்டினப்பாக்கத்துக்கு பதில் கிண்டி, பல்லவன் இல்லம் என வெளியான செய்திகளிலெல்லாம் உண்மையே இல்லை. இப்போது வரைக்கும் பட்டினப்பாக்கத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் திட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்லலாம் என்றுதான் ஆலோசித்து வருகிறோம்’ என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

காசிமேடு: "மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?" – கனிமொழி கேள்வி

’முரசு’ புயலின்போது படகு கவிந்து விபத்துக்குள்ளானதில் காசிமேடு மீனவர்கள் 9 பேர்...

புதிய தலைமைச் செயலகம்: "தமிழ்நாடு அபாயத்தை நோக்கி நகர்வது ஏன்?" – பூவுலகின் நண்பர்கள்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய...

சடலமாக மீட்கப்பட்ட 5 மீனவர்கள்: “புயல் நேரத்தில் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்?" – உதயநிதி

சென்னை காசிமேடு துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29-ம் தேதி செல்வழகன் என்பவருக்குச்...

“இடைத்தேர்தலே அறிவிக்கப்படல; இப்போதே விஜயபாஸ்கர் பணப்பட்டுவாடாவை ஆரம்பிச்சிட்டார்" – ரகுபதி தாக்கு

முன்னாள் அமைச்சர் ரகுபதி இடைத்தேர்தலே அறிவிக்கல. இப்போதே பணப்பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டாங்க. இதுதான்...