19
October, 2026

A News 365Times Venture

19
Monday
October, 2026

A News 365Times Venture

போதைப்பொருள்: “தவெக கட்சியா இல்ல Narcos கூடாரமா?" – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Date:

நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகிக்கு சொந்தமான வீட்டில் 135 கிலோ எடையுள்ள ‘மெத்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையில், போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை மிரட்டிய புகாரில் தவெக நகரச் செயலாளர் பாலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முதல்வர் விஜய்

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.

பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் – பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?

கட்சியா இல்லை Narcos (போதைப்பொருள் கடத்தல் காரர்கள்) கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்த Dummy முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் – அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“தொடரும் கொலைகள்: நான் அப்போதே சொன்னேன்" – ஸ்டாலின் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் காவல்துறை தள்ளாடுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின்...

“அன்புச் சகோதரர் விஜய்-க்கு பணிவான வேண்டுகோள்" – லெஜெண்ட் சரவணன்

ஆயுதப் பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு நடிகர் லெஜெண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டுநர்களுடன்...

பினராயி விஜயனை கைதுசெய்ய தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை – கொந்தளிக்கும் சி.பி.எம்!

கொச்சி சி.எம்.ஆர்.எல் என்ற தனியார் தாதுமணல் கம்பெனியிடம் இருந்து மகள் வீணாவின்...