3
September, 2026

A News 365Times Venture

3
Thursday
September, 2026

A News 365Times Venture

"பெருவெள்ளத்திற்கு இந்தியா, சீனா, அமெரிக்கா காரணம்; இழப்பீடு வேண்டும்" – குற்றம்சாட்டும் நேபாள அரசு

Date:

கடந்த வாரம் (ஆகஸ்ட் 26), பனிப்பாறை சரிவினால் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் மீட்புப் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்தப் பேரிடருக்குக் காரணம் இந்தியா, சீனா, அமெரிக்கா தான் என்று நேபாளம் குற்றம் சாட்டுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேபாளப் பெருவெள்ளம் குறித்து நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல் பேசியுள்ளார்.

ஷிசிர் கானல், “நேபாளம் பசுமைக்குடில் வாயுக்களை மிகக் குறைவாகவே வெளிப்படுத்துகிறது.

இருந்தும், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் தீவிரப் பாதிப்புகளான பனிப்பாறைகள் அதிவேகமாக உருகுவது மற்றும் மலைப்பகுதிகளில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களை அது அளவுக்கு அதிகமாக எதிர்கொண்டு வருகிறது.

நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல்

இதனால், நேபாளம் தனது சர்வதேசத் தூதரக அணுகுமுறையை ‘உதவி கேட்பதில்’ இருந்து ‘நீதி மற்றும் இழப்பீடு கோருவதற்கு’ மாற்றியமைக்க உள்ளது.

இது ஏதோ தொண்டு அல்லது தர்மம் சார்ந்த விஷயம் அல்ல. இது சட்டப்பூர்வ மற்றும் தர்மநெறி சார்ந்த கடமை.

உலகிலேயே அதிகளவு பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடும் சீனாவிற்கும், இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்காவிற்கும், மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவிற்கும் வரலாற்று ரீதியான பொறுப்பு உள்ளது.

பெரு நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மற்றும் தொழில் வளம் மிக்க நாடுகளும் நேபாளம் போன்ற மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

இது நமது நாகரிகத்தின் வாழ்வாதாரப் பிரச்னை.

இமயமலைப் பனிப்பாறைகள் மறைந்துவிட்டால், கங்கை மற்றும் திரிசூலி போன்ற நதிகளை நம்பியிருக்கும் தெற்காசியாவில் வாழும் 200 கோடிக்கும் அதிகமான மக்களின் குடிநீர் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியாகிவிடும்.

நாங்கள் நேபாளத்திற்காக மட்டும் குரல் கொடுக்கவில்லை. ஒட்டுமொத்த தெற்காசிய நாகரிகத்தின் எதிர்காலத்துக்காகவே போராடுகிறோம்” என்று கூறியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"கட்டுமானச் செலவே ரூ.4 கோடி தான்; முதல்வரின் திறப்பு விழாவுக்கு ரூ.5 கோடி செலவு!" – நயினார் தாக்கு

திருச்சியில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில தலைவர் நயினார்...

“கொளத்தூரின் தேர்தல் முடிவுகள் வாக்கு பதிவு இயந்திரங்களினால் வந்ததே..!"- என்.ஆர்.இளங்கோ திட்டவட்டம்

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின்...

பஸ்ஸை முத்தமிட்டு, டயரை தொட்டு வணங்கி.. 18 ஆண்டுக்கால பணி, நிறைவு – கண்ணீர் பெருக நெகிழ்ந்த ஒட்டுநர்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனை பகுதியைச் சேர்ந்தவர் பால் குரியன்...

`இது முட்டாள்தனமானது' Vs `சமநிலையைப் பேண முடியும்' – TRB ராஜா – கீர்த்தனா கருத்து மோதல்!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்...