20
April, 2025

A News 365Times Venture

20
Sunday
April, 2025

A News 365Times Venture

"பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது" – கனிமொழி எம்.பி

Date:

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசும்போது, “திராவிடம், திராவிட மாடல் என்று கேட்டாலே அவர்களைக் கலங்கவைக்கும் ஒரு மாடலாக இந்த ஆட்சி உள்ளது.

கனிமொழி

திராவிட மாடலை எதிர்க்கக் கூடியவர்கள் யாருக்கும் எதுவும் கிடைக்கக்கூடாது என்று நினைக்க கூடியவர்கள். நிறுவனங்கள் தொழிற்சாலைகள், சின்ன சின்ன நிறுவனங்களை உள்ளிட்டவற்றை நிறுத்திவிட்டு இந்தியாவில் இரண்டு பேர் மட்டுந்தான் தொழில் செய்கிறார்கள். அவர்களின் எண்ணப்படி செயல்படக்கூடியது தான் மத்திய பா.ஜ.க ஆட்சி.

யாருக்கெல்லாம் கல்வி, வேலைவாய்ப்பில் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் வாய்ப்பு மறுக்கப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கித் தந்தது திராவிட இயக்கம். தந்தை பெரியார் அவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்.

பேச்சு

ஆனால், பெரியார் மக்களுக்காகப் போராடி எத்தனை முறை சிறைசென்றாலும் ஒரு முறை கூட நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்காதவர். டங்ஸ்டன் திட்டம் தி.மு.க முயற்சியால் கைவிடப்பட்டுள்ளது. மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தையும் கைக்கட்டி ஆதரித்தது அ.தி.மு.க அரசு. சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டுமே எடப்பாடி வருவார் பின்னர் அவர் எங்குபோவார் எனத் தெரியாது. இப்படித்தான் இவர்கள் அரசியல் செய்கிறார்கள்.

‘தமிழ், தமிழ்’ எனக் கூறிக்கொண்டு தமிழையும், தமிழர்களையும் கொச்சைப்படுத்தக்கூடிய, பெரியாரை இழிவுப்படுத்தக்கூடிய சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழலுக்கு நம் முதல்வர் தள்ளப்பட்டிருக்கிறார்.

கூட்டம்

தமிழகத்திற்கு பொழுதுபோக்கிற்காக ஒரு ஆளுநர் இருக்கிறார். அவர் ஆளுநராக இல்லை, அரசியல்வாதியாக செயல்படுகிறார். மக்களுக்குத் தேவையான திட்டங்களை செய்வதற்கு எந்தவித நிதியையும் ஒன்றிய அரசு கொடுப்பதில்லை. பல்கலைக்கழகங்களுக்கு நிர்வாகிகளைக்கூட நியமிக்க முடியாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என நீதிமன்றம் கேட்கும் அளவிற்கு ஒரு ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ளார்” என பேசினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு'- மராத்திக்காக பகையை மறந்து கூட்டணி சேரும் தாக்கரே சகோதரர்கள்?

மகாராஷ்டிரா பள்ளிகளில் 1வது வகுப்பு முதல் 5வது வகுப்பு வரை வரும்...

`இறந்து' விட்டதாக இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு; ஆம்புலன்ஸில் திடீரென அசைந்த உடல்… என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், தோகைபாடியை சேர்ந்தவர் பிரகாஷ். மிகுந்த உடல் நலக்குறைகளுடன் புதுச்சேரி...

துரை வைகோ Vs மல்லை சத்யா: வெடித்துக் கிளம்பிய உட்கட்சி பஞ்சாயத்து!

ம.தி.மு.க-வின் முதன்மைச் செயலாளரும் திருச்சி தொகுதியின் எம்.பி-யுமான துரை வைகோ, இன்று...