27
August, 2026

A News 365Times Venture

27
Thursday
August, 2026

A News 365Times Venture

`பெண் போலீஸாரை டீ, காபி கொடுக்கத்தான் வைத்திருக்கிறார்கள்!’ – முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா

Date:

புதுச்சேரியில் கடந்த 10-ம் தேதி முதல் 2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பூஜ்ஜிய நேரத்தில் நேற்று பேசிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா, “புதுச்சேரியில் உள்ள 17 லட்சம் மக்கள்தொகையில் 9 லட்சம் பேர் பெண்கள். ஆனால் மூன்று காவல் நிலையங்கள் மட்டுமே இருக்கின்றன. புதுச்சேரி முழுவதும் 440 பெண் போலீஸார் மட்டுமே இருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அப்படியான சூழலில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் அவர்கள் தங்கள் பிரச்னைகளை சொல்லக்கூடிய இடமாக காவல் நிலையங்கள் இல்லை.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்

அனைத்து காவல் நிலையங்களிலும் `மகிளா டெஸ்க்’ என்று ஒன்று இருக்கிறது. அதில் பணியாற்றும் பெண் போலீஸாரை அந்த காவல் நிலையங்களில் இருக்கும் இன்ஸ்பெக்டர்களும், சப் இன்ஸ்பெக்டர்களும் டீ, காபி கொடுப்பதற்குத்தான் வைத்திருக்கிறார்கள். போலீஸ் பணியிடங்களில் 50% சதவிகிதம் பெண்களுக்கு வழங்க வேண்டும். புதுச்சேரியிலும், காரைக்காலிலும் மகளிர் காவல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும். புதுச்சேரியை பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாற்ற வேண்டும். புதுச்சேரி மக்கள்தொகையை கணக்கில் வைத்துப் பார்த்தால் பெண் போலீஸாரின் எண்ணிக்கை 1% சதவிகிதம்கூட இல்லை” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நேபாளம்: "ஈஷாவில் இருந்து யாத்திரை சென்றவர்களையும் காணவில்லை; அவர்களை மீட்க தயார்" – ஜக்கி வாசுதேவ்

நேற்று நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டு, அதில் குறைந்தபட்சம் 160 பேர் உயிரிழந்துள்ளதாகத்...

"தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுங்கள்; முதலமைச்சர் விளக்கம் வேண்டும்!" – பெ.சண்முகம் கடிதம்

இடதுசாரி அமைப்புகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும்...

"மோடி, அமித் ஷா அப்பாயின்மென்ட் உடனடியாக கிடைக்க இதுதான் காரணம்.!" – சொல்கிறார் கே.எல்.சுதீஷ்

நாடாளுமன்ற மாநிலங்களவையில், தென் மாநிலங்களிலிருந்து புதிதாக பொறுப்பேற்ற எம்.பி-க்களின் வருகைப்பதிவு, கேள்விகள்...

“சட்டமன்றம், காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்து பழிவாங்கும் இடமல்ல" – சிபிஐ வீரபாண்டியன்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும், பதுக்கலைத் தடுக்க வலியுறுத்தியும் இந்திய...