20
February, 2026

A News 365Times Venture

20
Friday
February, 2026

A News 365Times Venture

`பெண் போலீஸாரை டீ, காபி கொடுக்கத்தான் வைத்திருக்கிறார்கள்!’ – முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா

Date:

புதுச்சேரியில் கடந்த 10-ம் தேதி முதல் 2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பூஜ்ஜிய நேரத்தில் நேற்று பேசிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா, “புதுச்சேரியில் உள்ள 17 லட்சம் மக்கள்தொகையில் 9 லட்சம் பேர் பெண்கள். ஆனால் மூன்று காவல் நிலையங்கள் மட்டுமே இருக்கின்றன. புதுச்சேரி முழுவதும் 440 பெண் போலீஸார் மட்டுமே இருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அப்படியான சூழலில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் அவர்கள் தங்கள் பிரச்னைகளை சொல்லக்கூடிய இடமாக காவல் நிலையங்கள் இல்லை.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்

அனைத்து காவல் நிலையங்களிலும் `மகிளா டெஸ்க்’ என்று ஒன்று இருக்கிறது. அதில் பணியாற்றும் பெண் போலீஸாரை அந்த காவல் நிலையங்களில் இருக்கும் இன்ஸ்பெக்டர்களும், சப் இன்ஸ்பெக்டர்களும் டீ, காபி கொடுப்பதற்குத்தான் வைத்திருக்கிறார்கள். போலீஸ் பணியிடங்களில் 50% சதவிகிதம் பெண்களுக்கு வழங்க வேண்டும். புதுச்சேரியிலும், காரைக்காலிலும் மகளிர் காவல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும். புதுச்சேரியை பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாற்ற வேண்டும். புதுச்சேரி மக்கள்தொகையை கணக்கில் வைத்துப் பார்த்தால் பெண் போலீஸாரின் எண்ணிக்கை 1% சதவிகிதம்கூட இல்லை” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

AI மாநாடு: சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் அணி; கண்டனம் தெரிவிக்கும் பாஜக!

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில் டெல்லியில் 'இந்திய AI உச்சிமாநாடு...

திமுக கூட்டணியில் 'ஹவுஸ்புல்' – தொகுதிப் பங்கீட்டில் ஸ்டாலினுக்குக் காத்திருக்கும் சவால் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தடபுடலாக தயாராகி கொண்டிருக்கின்றன.பேரணி, பிரசாரம்,...

KN Nehru: “இதெல்லாம் எங்களுக்கு பின்னடைவல்ல…" – நீதிமன்ற உத்தரவு குறித்து ஆர்.எஸ் பாரதி!

அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் ஊழல் புகாரின் அடிப்படையில் அவர் மீது...