அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியால் மக்களுக்குப் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், “தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் உள்ள 68,500 வாக்குச்சாவடிகளுக்கு பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதில் 9 பேரில் 3 பேர் பெண்கள். நம்மை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழக்கச் செய்யும் வகையில் நீங்கள் வாக்குச்சாவடியில் பணியாற்ற வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி மாபெரும் கூட்டணி அமையும் என்று சொன்னார். அதன்படி அமைச்சர் அமிர்ஷா-எடப்பாடியார் தலைமையில் அற்புத கூட்டணி உருவாகிவிட்டது.
இந்த கூட்டணி தமிழக உரிமையை நிலைநாட்டும் கூட்டணியாகும். தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்து விட்டது.
தமிழகத்தில் ஊழல் அரசு, குடும்ப அரசு, வாரிசு அரசு நடைபெறுகிறது. இந்த அரசை அகற்ற வேண்டும் என்று மக்கள் உணர்ந்துள்ளார்கள். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்கள் விரும்பும் கூட்டணி உருவாகிவிட்டது
அதிமுகவிற்கு பூத் கமிட்டி மூலம் புது ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியால் மக்களுக்குப் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
படைபலம், பண பலம், அதிகாரம் பலம் இவற்றை வைத்துத்தான் திமுக செயல்படுகிறது. இன்றைக்கு அதன் நிலைமை ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது.
மக்கள் இந்த ஆட்சியைத் தூக்கி ஏறிய தயாராகி விட்டனர். தற்போது அமைந்துள்ள திமுக-பாஜக கூட்டணி வலிமையான கூட்டணி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடுக்கத்துடன் உள்ளார். திமுக அமைச்சர்கள் பொதுவெளியில் நாகரீகம் இல்லாமல் பேசுகிறார்கள்.
கட்டப்பஞ்சாயத்து, அராஜகம் இதுதான் திமுகவின் செயல்பாடாக உள்ளது. பெண்களை அதிமுகவினர் தெய்வமாக வணங்குவார்கள். ஆனால், திமுகவினரோ இழிவாகப் பேசி வருகிறார்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு வாக்கு கூட திமுகவுக்குப் போட மாட்டோம் என்று பெண்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும்.

தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியாக உள்ளது. சட்டமன்றத்தில் எதையும் பேச முடியவில்லை. மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் காவல்துறையே படுகொலை செய்யப்படுகிறார்கள்.
இதற்குச் சட்டசபையில் பேச அனுமதி மறுக்கிறார்கள். அப்படி என்றால் இது குறித்து எங்கே பேச முடியும்?
2010 ஆம் ஆண்டில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சராகக் குலாம் நபி ஆசாத், இணை அமைச்சராக காந்திசெல்வன் இருந்தார்.
அதில் காந்தி செல்வன் கையெழுத்திட்டுள்ளார். அப்படியென்றால் காந்திசெல்வன் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்? ஆனால், இன்றைக்கு நீட் தேர்வு குறித்து தீர்மானம் போடுகிறார்கள்.
அதேபோல 1974 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. தற்போது டாஸ்மாக் ஊழல், பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மடைமாற்றம் செய்வதற்காகக் கச்சத்தீவு குறித்து தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY