16
May, 2026

A News 365Times Venture

16
Saturday
May, 2026

A News 365Times Venture

பெட்ரோல்: "மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் விலை உயர்வைத் தாங்கியிருக்க வேண்டும்" – அன்புமணி

Date:

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்று முதல் அதிரடியாக உயர்த்தியுள்ளன.

இந்த விலை உயர்வின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்குச் சுமார் ரூ. 3 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று (மே 15, வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ள இந்த மாற்றத்தால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 103.98-க்கும், டீசல் ரூ. 95.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்றத்துக்கு வழிவகுக்கும் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

பெட்ரோல்

இந்த நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், “பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும்! பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலையும் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.90, டீசல் ரூ.95.47, இயற்கை எரிவாயு ரூ.91.50 ஆக அதிகரித்துள்ளது.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். அமெரிக்க – ஈரான் போர் காரணமாக ஹோர்மஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை கொண்டு வர முடியாததால், அதன் விலை 50%-க்கும் கூடுதலாக உயர்ந்திருப்பதையும், அதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.18 வரை இழப்பு ஏற்படுவதால் தான் வேறு வழியின்றி எரிபொருள்கள் விலை உயர்த்தப்பட்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் ஏற்கனவே அதிகமாக உள்ளன. இத்தகைய சூழலில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தை இயன்றவரை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தாங்கிக் கொண்டு விலை உயர்வைத் தவிர்த்திருக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

இந்த எதிர்பார்ப்பை எண்ணெய் நிறுவனங்கள் மதிக்காதது வருத்தம் அளிக்கிறது. பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதால் காய்கறிகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக உயரும்.

இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அதிமுக: `எப்போதும் போல `நான் மட்டுமே எல்லாம்' என்று.!' – எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி பதில்

தேர்தலுக்குப் பிறகு அதிமுக எடப்பாடி அணி - சி.வி.சண்முகம் அணி என...

'டி.ஆர்.பி. ராஜா வருத்தப்பட்டு பேசினார்; இது தெரிந்தால் சீட் வேண்டாம் என.!' – எம்.எல்.ஏ காமராஜ்

மன்னார்குடி எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காமராஜ், த.வெ.கவுக்கு ஆதரவு தெரிவித்ததால் அமமுக பொதுச்செயலாளர்...

முதல்வர் டு எதிர்க்கட்சி தலைவர் டு முதல்வர்! – கேரளாவில் ஒரே நாளில் வந்த அறிவிப்பு!

கேரள சட்டசபை ​எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி.சதீசனை...

'அதிமுகவின் கொறடா விஜயபாஸ்கர்தான்!' – மனு கொடுத்த சி.வி.சண்முகம்; என்ன செய்யப்போகிறார் சபாநாயகர்?

அதிமுக இரு அணிகளாக பிளவு பட்டிருக்கும் நிலையில், இன்றும் சி.வி.சண்முகம் தரப்பினர்...