2
October, 2026

A News 365Times Venture

2
Friday
October, 2026

A News 365Times Venture

புதுச்சேரி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 2,500 கிராம் தங்கம் நாணயங்கள் பறிமுதல்

Date:

புதுச்சேரி சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி சார்பில் அசோக் ஆனந்தும், காங்கிரஸ், த.வெ.க மற்றும் வி.சி.க சார்பில் விநாயகமும், தி.மு.க சார்பில் சேது செல்வமும் களம் காண்கின்றனர். 

சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்த்து 11 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். ஒருபுறம் தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில், மறுபுறம் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம்.

தலைமை தேர்தல் அதிகாரி ரவி பிரகாஷ் மற்றும் கந்தசாமி

தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக ரெட்டியார்பாளையம் தேர்தல் துறை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி ரவி பிரகாஷ், “தகுதியுள்ள வாக்காளர்கள் விண்ணப்பித்தால் உடனடியாக அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. வாக்குப்பதிவு நடக்கும் நாளான 6-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 9-ம் தேதியும் தட்டாஞ்சாவடி தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடிக்கு அருகிலுள்ள மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படும்.

மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாளில் இருந்து நேற்று வரை ரூ.1.77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த ரூ.3.62 கோடி மதிப்புள்ள 2,500 கிராம் தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“மதிமுக-வை அழிக்க 33 ஆண்டுகளாக முயற்சி செய்தது திமுக!” – துரை வைகோ சொல்வது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க வடக்கு மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம்...

மதுராந்தகம்: "தவெக அதிக பணம் தருகிறது; நீங்களும் கொஞ்சம் தாருங்கள் என்கிறார்கள்” – பெ.சண்முகம் ஷாக்

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த அனைத்துக் கட்சிகளும் தவெகவின் ‘மதச்சார்பற்ற...

Flydubai-க்கு அனுமதி; இஸ்ரேல் விமானத்திற்கு ‘நோ’ – சவூதி எடுத்த முடிவின் பின்னணி என்ன?

துபாயின் ஃபிளைதுபாய் விமானத்தில் நேற்று நடந்த அதிர்ச்சிச் சம்பவம் அனைவரும் அறிந்ததே....

Flydubai-ல் இந்திய விமானிக்கு கத்திக்குத்து; ஈரானுக்குத் தொடர்பா? – ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சென்ற விமானத்தில் விமானியைச் சக விமானி...