1
June, 2026

A News 365Times Venture

1
Monday
June, 2026

A News 365Times Venture

பாஜக-வா… தனிக் கட்சியா… “இரண்டு நாள்களில் முடிவு" – அண்ணாமலை | Live updates

Date:

பாஜக-வா… தனிக் கட்சியா… “இரண்டு நாள்களில் முடிவு” – அண்ணாமலை

அண்ணாமலை

பாஜக கொடி இல்லாத காரில் சென்னை விமான நிலையத்துக்கு வந்திருக்கிறார் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை. `பாஜகவுடன் சமரசமா… அல்லது புதுக் கட்சி தொடங்கப் போகிறீர்களா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இரண்டு நாள்களில் அனைத்துக்கும் பதில் சொல்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார் அண்ணாமலை.

`இந்த விஜய் சும்மா இருக்க மாட்டான்..!’ – திருச்சியில் ஆவேசமான முதல்வர்

முதல்வர் விஜய்

“ரீல்ஸ் போட்டவர்கள் நீயூஸ் பார்க்கிறார்கள். அண்ணா உருவாக்கிய திமுக கீழிறங்க யார் காரணம். நீங்கள் மக்களை தவறாக பேசினால் இந்த விஜய் கேள்வி கேட்பான். சும்மா இருக்க மாட்டான். சட்டமன்றத்தில் நடப்பதை இப்போது அனைவரும் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறோம். போதை பொருள் பழக்கத்தை உருவாக்கியவர்கள் நீங்கள். தொடக்கத்திலேயே நீங்கள் தடுக்கவில்லை. சட்டம் ஒழுங்குக்கு என் மீது பழி போடுவதா? சிங்கப்பெண் படை அடுத்த வாரம் அறிமுகம் ஆகும். தீய சக்தி, தீர்ந்து போன சக்தி. திமுக-வும், அதிமுக-வும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றனர். அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்தெறிந்திருக்கிறோம். திருச்சி கிழக்கு என் செல்லபிள்ளை மாதிரி. உங்களில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்” – திருச்சியில் முதல்வர் விஜய் உரை

`தேர்தல் ஆணைய விதிப்படி நான் பெரம்பூர் எம்.எல்.ஏ; ஆனா திருச்சி…’ – முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

திருச்சி ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் முதல்வர் விஜய் உரையாற்றி வருகிறார். “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கு வணக்கமும் நன்றியும், திருச்சி மக்களுக்கு சிறப்பு நன்றி! தேர்தல் ஆணைய விதிப்படிதான் நான் பெரம்பூர் எம்.எல்.ஏ; ஆனால் திருச்சி மக்களுடன் இருப்பேன். 6 மாதம் அமைதியாக இருப்போம் என்று கூறினார்கள். ஆனால் அவர்களால் 6 நாள்கள்கூட அமைதி காக்க முடியவில்லை” என்றார்.

திருச்சி: தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய முதல்வர் விஜய்-ன் மக்கள் சந்திப்பு

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அமைச்சர் ராஜ்மோகன் வரவேற்புரை ஆற்ற, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி.

“திமுக கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா… மதிமுக ஒரு தனி இயக்கம்!” – துரை வைகோ

துரை வைகோ
துரை வைகோ

“திமுக கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து கட்சியின் பொதுக்குழுவில் கூடி முடிவெடுப்போம். மதிமுக ஒரு தனி இயக்கம். எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது அவர்களின் தனிப்பட்ட முடிவு” – திருச்சியில் முதல்வரை வரவேற்ற மதிமுக எம்.பி துரை வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி!

திருச்சியில் முதல்வர் விஜய்; வரவேற்ற மதிமுக எம்.பி துரை வைகோ

முதல்வர் விஜய், திருச்சிக்கு விரைந்திருக்கிறார். திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றிருக்கும் அவரை, திருச்சி விமான நிலையத்தில் மதிமுக எம்.பி துரை வைகோ உள்ளிட்டோர் வரவேற்றனர். அணிவகுப்பு மரியாதையை ஏற்று, மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்துக்குச் செல்கிறார் முதல்வர் விஜய்.

மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவா? – மத்திய அரசு திட்டம்?

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மக்களவையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதா, பெரும்பான்மை கிடைக்காமல் எதிர்க்கட்சிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசு மீண்டும் அந்த மசோதாவைக் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

நீதிபதி மோகனாவிற்கு விஜய் வாழ்த்து

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்து…

மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

மோகனா
மோகனா

உச்ச நீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்களின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாகத் திகழும்.

மாண்பமை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் அவர்களுக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

டெல்லி செல்லும் அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார். அங்கே பாஜகவின் முக்கிய தலைவர்களைச் சந்திப்பது அவரது பிளான் என்று கூறப்படுகிறது.

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்று ஓராண்டிற்கு மேலாகியும் இன்னும் அண்ணாமலைக்கு எந்தப் பதவியும் கொடுக்கப்படவில்லை.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட விரும்பவில்லை. பிரசாரத்தில் மட்டும் தலைகாட்டிவிட்டுச் சென்றார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்த நிலையில், அண்ணாமலை புதிய கட்சி ஆரம்பிக்கிறார் என்கிற பேச்சுகள் எழுந்துள்ளன. அதற்காகத் தான் அவர் இந்த டெல்லி பயணம் செல்கிறார் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில், ஒன்பதாம் வகுப்பில் மும்மொழி கொள்கையை உடனடியாக கட்டாயமாக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தது தான் இந்தப் பேச்சிற்கு இன்னும் வலு சேர்க்கிறது.

நெல்லை வண்ணார்பேட்டையில் மத்திய ,மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம்.!

திருச்சி செல்கிறார் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் நின்று களம் கண்டார்.

இந்த இரண்டு தொகுதிகளிலுமே மக்கள் விஜயைத் தான் தங்களது எம்.எல்.ஏவாக தேர்வு செய்தனர்.

ஆனால், ஒரே ஒரு தொகுதியில் தான் எம்.எல்.ஏவாகத் தொடர முடியும் என்கிற நிலையில், திருச்சி கிழக்கில் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.

இதையடுத்து தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு மக்களுக்கு நன்றி சொல்ல திருச்சி செல்கிறார் விஜய்.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்

தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய ஆட்சி பொறுப்பேற்று முடித்த பிறகுமே, இன்னும் தமிழ்நாட்டில் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.

ஆக, இன்றைய தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான செய்திகளை இந்த ‘Live Blog’-ல் தெரிந்துகொள்ளுங்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்: புதுக்கோட்டையில் போலீஸ் தடை! – காட்டமான ஆவணப்பட இயக்குநர்கள்!

புதுக்கோட்டையில் நேற்று ( 31-5-2026 ) அரங்கேறிய அந்தச் சம்பவம், தமிழ்நாட்டின்...

இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்; ஏற்கெனவே ரூ.7 உயர்வு; இன்னும் எவ்வளவு உயரலாம்?

ஈரான் போர் காரணமாக, இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாகப்...

புதிய கட்சி தொடக்கமா? டெல்லி பறக்கும் அண்ணாமலை! – பின்னணி என்ன?

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது பல அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும்...