17
July, 2026

A News 365Times Venture

17
Friday
July, 2026

A News 365Times Venture

பழனி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தைப் பதிவு செய்தது நானா? – சார்பதிவாளர் ஜஸ்டின் சொல்வது என்ன?

Date:

பழனி தண்டாயுதபாணி கோவிலுக்குச் சொந்தமான 1 ஏக்கர் 40 செண்ட் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ய முயன்ற வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிமண்டன், நிலத்தை விற்ற முருகதாஸ், வாங்கிய வெள்ளதுரை சேதுபதி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்ட பதிவாளர் சசிகலாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் சஸெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று மதுரை நீதிமன்ற நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தரப்பில், “ரூ. 100 கோடி மதிப்பு நிலத்தைப் பதிவு செய்யவில்லை. நிலத்தைப் பதிவு செய்தது சார்பதிவாளர் பாலசுந்தர்தான். அந்தப் பத்திரத்துக்கு ஆவண எண் மட்டுமே வழங்கியுள்ளார் ஜஸ்டின் மணிகண்டன் வழங்கியுள்ளார். இதில் பாலசுந்தர் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜஸ்டின் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜஸ்டின் மணிகண்டன்

தமிழ்நாடு அரசு தரப்பில், “ரூ. 100 கோடி நிலத்தை 2 சார் பதிவாளர்கள் பத்திரப்பதிவு செய்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்.

இதை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “பத்திரப்பதிவு முடிந்த பிறகு ஆவண எண் மட்டுமே ஜஸ்டின் மணிகண்டனால் வழங்கப்பட்டுள்ளது. 2 சார் பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்? ஆனால் இந்த விவகாரத்தில் ஒரு சார்பாக மட்டுமே நடவடிக்கை எடுதக்கப்பட்டுள்ளது” என கூறிய நீதிபதிகள் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கினர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள்...

'12 மாவட்ட அரசுப் பள்ளிகள் சேதம்' – ஆய்வு செய்து சரிசெய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் வல்லாதிரக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த...

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.மேயர் ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா...

"பாஜக-வும் திமுக-வும் ஒருபோதும் ஒன்றாக இணைய முடியாது; ஏனென்றால்…" – ஜெயராம் ரமேஷின் விளக்கம் என்ன?

திமுகவும், பாஜகவும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என்கிற செய்தி தொடர்ந்து...