21
November, 2026

A News 365Times Venture

21
Saturday
November, 2026

A News 365Times Venture

பன்னூனைக் கொல்லச் சதி: இந்தியர் நிகில் குப்தாவுக்கு அமெரிக்காவில் 19 ஆண்டுகள் சிறை! – என்ன நடந்தது?

Date:

நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்யத் திட்டமிட்ட வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தாவுக்கு (55) அமெரிக்க நீதிமன்றம் நேற்று (நவம்பர் 20) 19 ஆண்டுகள், 7 மாதங்கள் சிறைத் தண்டனை எனத் தீர்ப்பளித்துள்ளது.

என்ன பிரச்னை இது?

அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் மற்றும் பன்னூனின் தகவல்களின்படி,

இந்திய அரசின் முன்னாள் ஊழியரான விகாஷ் யாதவ், குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய 2023-ம் ஆண்டு மே மாதம் நிகில் குப்தாவை நியமித்திருக்கிறார்.

குர்பத்வந்த் சிங் பன்னூன்

இந்தியாவின் அமைச்சரவைச் செயலகத்துடன் தொடர்புடையவராகக் கூறப்படும் யாதவ், இந்தக் கொலைக்காக 1,00,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.84 லட்சம்) பேரம் பேசியதாகவும், அதில் 15,000 டாலர்களை முன்பணமாகக் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் கொலைத் திட்டத்தையொட்டி, 2023-ம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி செக் குடியரசின் பிராக் நகரில் கைது செய்யப்பட்டார் நிகில் குப்தா.

பின்னர், 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார். விகாஷ் யாதவ் இன்னும் சிக்கவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம், பன்னூனைக் கொலை செய்ய முயற்சித்ததாக நிகில் குப்தா ஒப்புக்கொண்டார்.

இதையடுத்துத் தான் நேற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

என்னென்ன குற்றச்சாட்டுகள்?

கூலிப்படை மூலம் கொலை செய்ய முயன்றது, அதற்காகச் சதித் திட்டம் தீட்டியது மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சதி ஆகிய குற்றச்சாட்டுகள் நிகில் குப்தா மீது வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிற்குத் தொடர்பு?

இந்தக் கொலைச் சதியில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருக்கிறது என்று பன்னூன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்தியச் சட்டத்தின் கீழ் பன்னூன் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பதும், அவரது அமைப்பான ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ராமநாதபுரம்: சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர்… துர்நாற்றத்தில் தவிக்கும் நம்புதாளை மக்கள்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நம்புதாளை கிராமத்தில் ECR சாலையிலிருந்து கிராமத்திற்குச்...

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்… இருதலைக்கொள்ளி நிலையில் முதல்வர் விஜய்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் அனலைக் கிளப்பியிருக்கிறது. கடந்த...

தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை MoU-க்கள், எத்தனை வேலைவாய்ப்புகள்? – தகவல் வெளியிட்ட அமைச்சர் கீர்த்தனா

வருகிற நவம்பர் 25-ம் தேதி, தமிழ்நாட்டில் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவிருக்கிறது....

‘அதிமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்களில் எஸ்.பி. வேலுமணியும் ஒருவர்’ – எடப்பாடி பழனிசாமி காட்டம்!

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டிளியத்தார்....