10
July, 2026

A News 365Times Venture

10
Friday
July, 2026

A News 365Times Venture

'பத்திரிகைக்காரங்களாம் வெளிய போய்டுங்க.!' – முதல்வர் விஜய் கூட்டத்தில் அடாவடி காட்டிய கரூர் போலீஸ்!

Date:

முதல்வர் விஜய் கரூரில் தவெக கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதித்து காவல்துறை அடாவடி காட்டி வருகிறது.

CM Vijay

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக முதல்வர் விஜய் கரூருக்கு செல்கிறார். இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தன. ஆனால், நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்றிருக்கும் பத்திரிகையாளர்கள் அடாவடியாக நடத்தியிருக்கின்றனர்.

முதல்வரின் மக்கள் சந்திப்பு நடக்கும் அரங்குக்குள் நின்ற பத்திரிகையாளர்களை ‘முதல்வரின் பாதுகாப்பு கருதி உங்களுக்கு இங்கே இடம் கிடையாது. அரங்குக்கு வெளியே இருக்கும் கூடாரத்தில் போய் அமருங்கள்’ என வலுக்கட்டாயமாக கூறியிருக்கின்றனர். ‘நிகழ்வு நடக்கும் இடத்தில் இருந்தால்தான் செய்தி சேகரிக்க முடியும். அரங்குக்கு வெளியே இருந்தால் எப்படி செய்தி கொடுக்க முடியும்?’ என பத்திரிகையாளர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்த போதும், அதை துளியும் சட்டை செய்து கொள்ளத காவல்துறையினர் பத்திரிகையாளர்களை வெளியே அனுப்புவதிலேயே குறியாக இருந்திருக்கின்றனர்.

அரங்குக்கு வெளியே அனுப்பப்பட்ட பத்திரிகையாளர்கள்
அரங்குக்கு வெளியே அனுப்பப்பட்ட பத்திரிகையாளர்கள்

இத்தனைக்கும் செய்தி சேகரிக்கவிருக்கும் பத்திரிகையாளர்கள் ஒரு ஹோட்டலில் வந்து நிகழ்ச்சிக்கான பாஸை வாங்கிக் கொள்ளலாம் தவெகவின் அதிகாரப்பூர்வ மீடியா வாட்ஸ் அப் க்ரூப்பில் செய்தி சொல்லப்பட்டிருந்தது. அது காவல்துறை ஆய்வு செய்து வழங்கிய பாஸூம் கூட. இரவோடு இரவாக பாஸ் வாங்கிவிட்டுதான் பத்திரிகையாளர்கள் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு சென்றிருக்கின்றனர். ‘பாஸ் இருந்தாலும் பரவாயில்லை வெளியே போங்க…’ என காவல்துறையினர் பத்திரிகையாளர்களை அடாவடியாக வெளியேற்றியிருக்கின்றனர்.

பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட பாஸ்
பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட பாஸ்

விஜய் தவெக தலைவராக இருந்தபோதும் சரி, முதல்வரான பிறகும் சரி ஊடகங்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை மரியாதையை கூட அவரது சகாக்கள் வழங்குவதில்லை. அதை முதல்வர் விஜய்யும் கண்டும் காணாமல் இருப்பது ஜனநாயகத்துக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கும் இழைக்கப்படும் அநீதி.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'15 மணி நேர ஷிஃப்ட்; நோ லீவ்; கைக்கு வராத படி காசு!' – குமுறும் தீயணைப்பு காவலர்கள்!

தங்களுக்குப் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், முறையாக ஷிஃப்ட்கள் ஒதுக்கப்படுவதில்லை என்றும் தீயணைப்பு...

`களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? ஓடு… ஓடு… ஓடு' விஜய் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன்...

"தென்னிந்தியர்களும் வட இந்திய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்"- ஆளுநர் அர்லேகர் பேச்சு

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சி...

`கோயில் நிலத்தை முதல்வர் விஜய் தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்திருக்கிறார்’- குற்றம்சாட்டும் நயினார்

கோவை பீளமேடு பா.ஜ.க அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச்...