12
February, 2025

A News 365Times Venture

12
Wednesday
February, 2025

A News 365Times Venture

`பதவி வேண்டுமா, திமுக வீழ்த்தப்பட வேண்டுமா? முடிவு செய்து கொள்ளுங்கள்’ – டிடிவி தினகரன் சொல்வதென்ன?

Date:

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “தமிழகத்தில் ஒரு ஏடிஜிபி-யே புகார் கொடுக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கின் நிலை இருக்கிறது. பொதுவாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பட்டி தொட்டியெங்கும் போதைப்பொருள் கிடைக்கிறது.

டிடிவி தினகரன்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை. 2004 – 14 வரையிலான திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும் சில ஆண்டுகள் தவிர்த்து பெரும்பாலான ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பெயர் குறிப்பிடவில்லை. மத்திய பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒன்று.

திமுக ஆட்சியால் நிதியை சரியான முறையில் கையாள முடியாமல், முதலீடுகளை ஈர்க்க முடியாமல் போனதால் இதுபோன்ற புது புரளியை சில ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள். மோடியின் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு.

அண்ணாவுக்கு மரியாதை

நான் குறிப்பிட்டு எந்தக்கட்சியையும் எங்கள் பக்கம் அழைக்கவில்லை. திமுகவை வெல்லக்கூடிய ஆற்றல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமே இருக்கிறது என்ற அடிப்படையில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பொதுவான ஒரு அழைப்பை விடுத்துக் கொண்டிருக்கிறேன்.

திமுகவை எதிர்க்க வேண்டும் என்று நினைக்கின்ற கட்சிகள் தனியாக நின்று வாக்குகளை வீணடிக்காமல், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இது என்னுடைய விருப்பம் மட்டுமே. சம்பந்தப்பட்ட கட்சிகள்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டுமா? திமுக வீழ்த்தப்பட வேண்டுமா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“தமிழ்நாட்டில் தொடரும் நாய்களின் தொல்லை..'' -உங்கள் பகுதியில் நடந்தது என்ன? – #கருத்துக்களம்

நன்றியுள்ளப் பிராணியாக கொண்டாடப்படும் நாய், பலரின் செல்லப் பிரணியாகவும் வளர்ந்து வருகிறது....

"செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வேன் எனச் சொன்னால்..!" – உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன?

செந்தில் பாலாஜி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றதில் அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம்,...

`ECI குமஸ்தா தான்' -கொதிக்கும் ADMK | சிக்கலில் இரட்டை இலை -பின்னணியில் BJP? | DMK Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர்...