20
November, 2026

A News 365Times Venture

20
Friday
November, 2026

A News 365Times Venture

'பணிநீக்கமா, ராஜினாமாவா?' Guidance Tamilnadu சர்ச்சையில் டி.ஆர்.பி.ராஜா கேள்வி!

Date:

கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்திலிருந்து தமிழ்நாட்டின் முதலீட்டு ரகசியங்கள் ஆந்திராவிற்குக் கசிந்துள்ளதாகக் குற்றச்சாட்டு ஒன்று தற்போது எழுந்துள்ளது.

இந்த ரகசியங்களைக் கசியவிட்டது 15 கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தின் ஊழியர்கள் என்றும், இவர்கள் சமீபத்தில் அந்த நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த ராஜினாமா தகவலை மறுத்துள்ளது கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம்.

இது குறித்துத் தமிழ்நாட்டின் முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“GuidanceTN ஒரு விளக்கம் அளித்துள்ளது.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஒட்டுமொத்த சர்ச்சையும் ‘மொத்தமாகப் பணிநீக்கம்’ செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டதைச் சுற்றியே இருந்தது.

விஜய்

இரண்டுமே வேறுபட்ட விஷயங்கள்!

ஆனால், அந்த அறிக்கையோ ‘மொத்தமாகப் பதவி விலகல்’ எதுவும் நடக்கவில்லை என்று மறுத்துத் தொடங்குகிறது. இரண்டுமே முற்றிலும் வேறுபட்ட விஷயங்கள்!

இப்போது இது தவறான தகவல் என்பது தெளிவாகிவிட்ட நிலையில், ‘மொத்தமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்’ என்று செய்தி வெளியிட்டவர்கள், உண்மையைத் தெளிவுபடுத்தி ஒரு செய்தி வெளியிடுவார்களா? மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

ஏன் என்று யூகிக்க முடிகிறதா? ஏனென்றால், ஏதோ ‘உளவாளி’ இருப்பதாகச் சொல்லப்பட்ட இந்த ஒட்டுமொத்தக் கதையுமே, தவெக வட்டாரத்தில் உள்ள அரைவேக்காடுகளால் உள்நோக்கத்தோடு திட்டமிட்டுப் பரப்பப்பட்டதாகத் தெரிகிறது.

அரசியல் எஜமானர்கள் செய்த குளறுபடிகள்

எப்போதும் போல, தற்போதைய மற்றும் எதிர்காலத் தோல்விகளுக்குத் திமுக மீது பழி போட்டுத் தப்பித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அந்தத் திட்டம் பயங்கரமாகப் பின்னடைவைச் சந்தித்துவிட்டது.

எந்தவொரு அரசியல் சச்சரவுகளிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான அமைப்பு, இன்று அரசியல் எஜமானர்கள் செய்த குளறுபடிகளுக்கு விளக்கம் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த நிபுணர்களின் பல தசாப்த கால கடின உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம், தேவையற்ற சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதைப் பார்ப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

கைடன்ஸ் தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைவருக்கும்:

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தின் பாதுகாவலர்கள் நீங்கள் ஒவ்வொருவரும்தான்!

இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்க்க நீங்கள் காட்டும் தொழில் நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் ஓய்வில்லாத உழைப்பை நம்பித்தான் கோடிக்கணக்கான மக்களின் கனவுகளும், வாழ்வாதாரமும், எதிர்பார்ப்புகளும் உள்ளன .அரசியல் சர்ச்சைகள் உங்களது அந்த உன்னத நோக்கத்தைத் திசைதிருப்ப ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

கவனத்துடன் இருங்கள். சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியல் சார்பற்று இருங்கள்.

நாம் அனைவரும் கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்த நிறுவனத்தின் சிறப்பை, அரசியல் தலையீடுகளோ, தனிப்பட்ட சுயநலன்களோ அல்லது ஆட்சி மாற்றங்களோ சிதைக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

ஆட்சிகள் வரும், போகும்; ஆனால், தமிழ்நாட்டின் நலன்தான் எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்!' – உச்ச நீதிமன்றம் அனுமதி

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்...

Guidance TN விவகாரம்: "தமிழகத்தின் தொழில் முதலீட்டு ரகசியங்கள் கசிந்தனவா?" – டிடிவி தினகரன் கேள்வி

தமிழ்நாட்டிற்கு வரும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வரும்...

"குறுவை போச்சு; சம்பாவும் கருகுது; விவசாயிகளுக்கு Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?"- ஸ்டாலின்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த மூன்று...

"ஆந்திராவின் அதிர்ச்சியூட்டும் ரகசிய முதலீட்டு வியூகம் லீக் ஆகிவிட்டது!" – ஆந்திரா அமைச்சர் கிண்டல்

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திரா பக்கம் செல்கின்றன. தமிழ்நாடு...