13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

`நேபாளமும் இந்தியாவில் ஆக்கிரமித்துள்ளது; இப்போ தான் தெரியவந்தது' – அதிர்ச்சி கிளப்பிய நேபாள பிரதமர்

Date:

இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் எல்லைப் பிரச்சனை தற்போது ஒரு புதிய அதிரடி திருப்பத்தை சந்தித்துள்ளது.

“இந்தியா மட்டும்தான் நேபாளத்தின் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் நேபாளமும் இந்தியாவின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது என்ற உண்மை எனக்கு இப்போதுதான் தெரியவந்தது” என்று நேபாள நாட்டின் பிரதமர் பாலேந்திர ஷா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சை பிரிவாக இருக்கும் காலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியதுரா ஆகிய எல்லைப் பகுதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஷா, இப்பிரச்சனை குறித்து இந்தியாவுக்குத் தூதரகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நேபாள பிரதமர்

மேலும், இந்தப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காண இரு நாடுகளும் ஒன்றிணைந்து வரலாற்று அறிஞர்கள் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சம்மதித்துள்ளதாகவும், இதுகுறித்து சீனா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுடனும் நேபாள அரசு ஆலோசனைகளை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், “நேபாளமும் இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது” என்று பிரதமர் ஷா பேசியது நேபாள நாட்டு மக்கள் மற்றும் அரசியல் வல்லுநர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் எல்லையை நேபாளம் ஆக்கிரமித்ததாக எந்த ஒரு வரலாற்று ஆதாரமும் இல்லை என்று நேபாளத்தின் முன்னாள் தூதர்கள் மற்றும் எல்லை நிபுணர்கள் பிரதமரின் இந்த விசித்திரமான கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

எல்லையில் சில இடங்களில் எல்லைத் தூண்கள் காணாமல் போயுள்ளதால், இரு நாட்டு விவசாயிகளும் ஒருவருக்கொருவர் நிலங்களை மாற்றிப் பயன்படுத்தி வருகிறார்களே தவிர, நேபாள அரசு இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்று எல்லை நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை வழித்தடம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே சலசலப்பு நிலவி வரும் சூழலில், இந்தியாவின் எல்லையை நேபாளமும் ஆக்கிரமித்துள்ளது என்று அந்நாட்டு பிரதமரே நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது சர்வதேச அளவில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`சாதி மறுப்புத் திருமணங்களும், தொடரும் ஆணவக் கொலைகளும்!' – கர்நாடகாவைப் பின்பற்றுமா தமிழ்நாடு?

சாதியும் - திருமணமும்அண்ணல் அம்பேத்கர், 'சாதி மறுப்புச் சிந்தனை' (Annihilation of...

'அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம்' – அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் பிரதமர்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் அமைதி ஒப்பந்த...

இந்தியாவின் உயரிய விருதை பெற்ற தமிழக ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு! எதற்கு தெரியுமா?

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி...