இன்று (ஏப்ரல் 11) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் அமித் ஷா தலைமையில் மாநில தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்ப மனு கூட்டம் இன்று நடைபெற்றிருந்து.
மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வந்துள்ள நிலையில், இன்று தமிழக பா.ஜ.க வின் புதிய தலைவருக்கான விருப்ப மனு தாக்கல் நடந்திருக்கிறது. தமிழக பா.ஜ.க -வின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இணைந்து நயினார் நாகேந்திரனை தலைவராகப் பரிந்துரை செய்து விருப்ப மனு அளித்துள்ளனர். அதன்படி பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பாரக்கப்படுகிறது.
அமித் ஷா தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் புதிய பாஜக மாநில தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது பாஜக.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் நயினார் நாகேந்திரன், “பாஜக மாநில தலைவர் பொறுப்பிற்கு கட்சியின் அறிவுரையின்படி வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். 10 ஆண்டுகள் பாஜகவில் உறுப்பினராக இருந்தால்தான் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும் என்கிற விதி இருப்பது உண்மைதான். அதுபற்றி பாஜக மாநில தலைவர் தேர்வுக் குழு அதிகாரிகள்தான் முடிவெடுப்பார்கள். நான் விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். அடுத்த பாஜக மாநில தலைவர் குறித்த செய்தி நாளை வந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
