3
May, 2026

A News 365Times Venture

3
Sunday
May, 2026

A News 365Times Venture

"நாங்கள் இந்தியாவைப் போல் இல்லை; எரிபொருள் வளத்தில் எங்களின் நிலைமை மோசம்" – பாக். அமைச்சர் ஆதங்கம்

Date:

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் பாகிஸ்தான் கடும் எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

இதனால் பாகிஸ்​தானில் பெட்​ரோல், டீசல் உள்​ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமை​யாக உயர்ந்​துள்​ளது.

இந்​நிலை​யில் பாகிஸ்​தானின் பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பெர்​வேஸ் மாலிக் பாகிஸ்தானிடம் ஒரு நாள் கூட அவசரக் காலத் தேவைகளுக்கான கையிருப்பு இல்லை என்றும் இந்தியா நினைத்தால் ஒரே கையெழுத்தில் இந்தியாவின் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்றும் நேர்காணல் ஒன்றில் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

எரிபொருள்

எரிபொருள் தட்டுபாடு குறித்து பேசியிருக்கும் அவர், “எரிபொருள் வளத்​தில் பாகிஸ்​தான் நிலைமை மோச​மாகவே இருக்​கிறது. பாகிஸ்​தானிடம் தற்​போது அவசர கால தேவைக்​கான எரிபொருள் இருப்பு ஒரு நாள் கூட கிடை​யாது என்​பதே உண்​மை.

எங்​களிடம் இருப்​பது வணிக ரீதி​யான இருப்பு மட்​டுமே. கச்சா எண்​ணெய் 5 முதல் 7 நாட்​களுக்கு மட்​டுமே வரும். எண்​ணெய் நிறு​வனங்​களிடம் உள்ள சுத்​தி​கரிக்​கப்​பட்ட எரிபொருள் அதி​கபட்​சம் 20 முதல் 21 நாட்​களுக்கு மட்​டுமே இருக்​கும். நாங்​கள் இந்தியாவைப் போன்​றவர்​கள் அல்ல.

இந்​தி​யாவோ 70 நாட்​களுக்​குத் தேவை​யான எரிபொருளைச் சேமித்து வைத்துள்ளது. அங்கு ஒரு நெருக்​கடி ஏற்​பட்​டால், ஒரு கையெழுத்​தில் அந்த இருப்பை வெளி​யிட்டு அவர்​களால் நிலை​மை​யைச் சீர் செய்ய முடி​யும்.

நீண்ட காலத்​துக்கு எரிபொருள் தேவையைச் சமாளிக்க இயலும். ஆனால், பாகிஸ்​தான் எளி​தில் நிலைகுலையும் நிலையில் உள்ளது. புதிய சேமிப்புக் கிடங்குகளை உருவாக்க அதிக நிதி தேவைப்படுவதால், தற்போதைய பொருளாதாரச் சூழலில் பாகிஸ்தானால் அத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை.

இந்தியா
இந்தியா

இந்திய அரசு தனது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்காக நிலத்தடியில் மிகப்பெரிய சேமிப்புக் கிடங்குகளை அமைத்துள்ளது. அவசர காலங்களில் அல்லது போர்ச் சூழலில் இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், பாகிஸ்தானிடம் அத்தகைய பிரத்யேக அரசு சேமிப்பு வசதிகள் எதுவும் இல்லை” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

4 States Election Results: அனல் பறக்கும் அரசியல் களம் – வெல்லப் போவது யார்? – நாளை வாக்கு எண்ணிக்கை | Live Updates

புதுச்சேரி, கேரளா மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள்...

முதல் தேர்தல் தொடங்கி இன்று வரை – கோட்டையைப் பிடித்தவர்கள், கோட்டை விட்டவர்கள் யார், யார்? | Depth

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை 16 சட்டமன்றத் தேர்தல்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன....

"சாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு கருணை மனுக்களை எழுதியது உண்மை; ஆனால்…" – சாவர்க்கரின் கொள்ளு பேரன்

லண்டனில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆற்றிய உரையில், சாவர்க்கர் குறித்து அவதூறாகப்...