19
September, 2026

A News 365Times Venture

19
Saturday
September, 2026

A News 365Times Venture

'நல்லவேள நான் ஜெயிக்கல…கொளத்தூர் மக்களுக்கு கோடானு கோடி நன்றி!' – மு.க.ஸ்டாலின் கலாய்!

Date:

திமுகவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடந்திருந்தது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் விஜய்யையும் தவெக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

முப்பெரும் விழா

மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ‘சினிமாவில் நடிக்கமாட்டேன் எனக் கூறிவிட்டு இப்போது மக்கள் முன்பு முதல்வர் நடித்துக் கொண்டிருக்கிறார். முதலின் பன்ச் டயலாக், இப்போது பாரின் ஷூட்டிங். எல்லாமே ரீல்ஸ்தான். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்து தமிழகத்தின் வளர்ச்சியை 25 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளிவிட்டார்.

ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சியினரால் நூற்றாண்டு பெருமைமிக்க சட்டமன்றத்தின் மாண்பே குலைந்து போயிருக்கிறது. நடந்து முடிந்த கூட்டத்தொடரில் நீங்களே பார்த்திருப்பீர்கள். நல்லவேளை…..இந்த கொடுமையையெல்லாம் பார்க்கும் வாய்ப்பை கொடுக்காத கொளத்தூர் மக்களுக்கு கோடானு கோடி நன்றி.முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டுக்கு பயணித்ததாக முதல்வர் கூறினார். நான் வெளிநாடு போன போது, ‘சி.எம்.சார்…வெளிநாடு முதலீடா…வெளிநாட்டில் முதலீடா?’ என மேடையில் கத்தினார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் அவரை பார்த்து, ‘சி.எம்.சார்…இந்தியாவில் இருக்கும் கம்பெனிக்கு எதற்கு லண்டனில் போய் கையெழுத்து போட்டீர்கள்?’ என கேட்கிறார்கள். இதில் பெரிய கொடுமை என்னவென்றால், தொழில்துறை அமைச்சரும் தொழில்துறை செயலாளரும் இல்லாமல் முதல்வர் முதலீடுகளை ஈர்க்க சென்றிருக்கிறார்’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“24 மணி நேரத்தில் 8 கொலைகள்: முதலமைச்சரைப் போல் காவல்துறையும் ஓய்வில் இருக்கிறதா?"- எம்.பி கனிமொழி

தமிழ்நாட்டில் சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய பகுதிகளில் இரட்டைக் கொலை, கரூரில் வடமாநில...

விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு இடையே வெளியேறி சென்ற அமைச்சர் ரமேஷ்! – என்ன நடந்தது?

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய முழு பயிர்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்...

'எவருக்கும் மிசா கைதை நிரூபிக்க வேண்டிய தேவை எனக்கில்லை…' – மு.க.ஸ்டாலின் ஆவேசம்

திமுகவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடந்திருந்தது....

'கலைஞருடன் ஒப்பிட உதயநிதிக்கு என்ன அருகதை இருக்கிறது?' – ஆதவ் கேள்வி!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்காக பாக...