16
August, 2026

A News 365Times Venture

16
Sunday
August, 2026

A News 365Times Venture

நயினார் சர்ச்சை பேச்சு: “வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது" – கொதிக்கும் அமைச்சர் கீர்த்தனா

Date:

“சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

நயினார் நாகேந்திரன் பேச்சுக்குக் கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர் தன் பேச்சுக்கு “எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்” என விளக்கமளித்திருந்தார்.

நயினார் நாகேந்திரன்

ஆனாலும் தவெக அமைச்சர்கள் தொடர்ந்து கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் அமைச்சர் கீர்த்தனா தன் எக்ஸ் பக்கத்தில், “பெண்களின் மாண்பையும், தாய்மையின் புனிதத்தையும் மதிக்கத் தெரியாத வகையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தாய்மார்களை கொச்சைப்படுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது, தாய்மார்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு மிகவும் தரக்குறைவானது.

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கலாம். கொள்கைகளை எதிர்க்கலாம். ஆனால், அரசியல் விமர்சனம் என்ற பெயரில் பெண்களின் கண்ணியத்தையும் தாய்மையின் பெருமையையும் இழிவுபடுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர், தனது ஒவ்வொரு வார்த்தையிலும் கண்ணியத்தையும் பொறுப்புணர்வையும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், இன்று அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் அரசியல் நாகரிகத்தின் எல்லைகளையே மீறியுள்ளன.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

தமிழ்நாட்டின் பெண்களின் சுயமரியாதையை அவமதிக்கும் எந்தவொரு பேச்சாக இருந்தாலும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பெண்களின் கண்ணியத்திற்கும், தாய்மையின் மாண்பிற்கும் எதிரான இத்தகைய பேச்சுகள் அனைத்தும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். தரக்குறைவான இப்பேச்சுக்காக நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பெண்களின் கண்ணியத்தை அரசியல் லாபத்திற்காகக் கொச்சைப்படுத்தும் போக்கு இனியாவது நிறுத்தப்பட வேண்டும்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`புதிய அணுமின் உலைகள்; அறிவுசார் நக்சலைட்டுகள்; பெண்களுக்கு அதிகாரமளித்தல்!' – பிரதமர் மோடி உரையின் ஹைலைட்ஸ் | Live

நமது மகள்கள் நாட்டின் ராணுவத்தை வழிநடத்தும் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்!பிரதமர் மோடி, ``சமோலியில்...

பள்ளி மாணவர் கொலை: "அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு" – உதயநிதி கண்டனம்

சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப் பள்ளியில் +2 படித்து...

“தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள், நயினார் நாகேந்திரன் அவர்களே..!" – அமைச்சர் ரமேஷ்

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய்...