6
June, 2026

A News 365Times Venture

6
Saturday
June, 2026

A News 365Times Venture

"நமது அரசியல் இயக்கம் தொடக்கம்; கட்சியாக அடுத்தப் பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம்!" – அண்ணாமலை அதிரடி

Date:

தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து மோதல்களின் காரணமாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது அவர் பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

அண்ணாமலை அதிருப்தி

இந்தத் தலைமை மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக பாஜகவிற்குள் உட்கட்சிப் பூசல்களும், நிர்வாகக் குளறுபடிகளும் அரங்கேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் முழுமையாக விலகிக்கொண்டார்.

அண்ணாமலை

2021 சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக, சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெறும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

இதனிடையே சிபிஎஸ்இ விவகாரத்தில் விமர்சித்து கருத்து வெளியிட, அண்ணாமலை விரைவில் தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்ற கருத்துகள் தீவிரமடைந்தன.

ராஜினாமாவை ஏற்ற பாஜக

இதனைத்தொடர்ந்து அண்ணாமலை டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று அவரின் ராஜினாமா கடிதத்தை பாஜக தலைமை ஏற்றிருக்கிறது. இதன் மூலம் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இருந்து விலகி இருக்கிறார்.

இதனிடையே நண்பகல் 12 மணி அளவில் சமூக வலைதளங்கள் மூலமாக உரையாடவுள்ளதாக அண்ணாமாலை நேற்று அறிவித்திருந்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

என்னுடைய பாதை வேறு…

அதன்படி பேசிய அவர், “2020-ல் பாஜகவில் இணைந்தேன். தமிழ்நாட்டில், தமிழக மக்களுக்காக 6 ஆண்டு காலமாக பணியாற்றியதை பாக்கியமாகக் கருதுகிறேன். எந்த இடத்தில் இணைந்தனோ அதே இடத்தில் வந்து மரியாதையோடு என்னுடைய பாதை வேறு, இலக்குகள் பெரியதாக இருக்கிறது, நிறைய மக்களை இணைத்து செயல்பட வேண்டும்.

புதிய அரசியலை அனைத்தையும் மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பண்பாகச் சொல்லிவிட்டு அதே இயக்கத்தில் இருந்து வெளியே வந்திருக்கிறேன்.

என் அரசியல் பாதை எளிதானது கிடையாது!

இது தமிழர் பண்பு. வெளியில் சென்றாலும் கூட மரியாதையாகச் சொல்லிவிட்டு செல்வதுதான் நம்முடைய பண்பு. இன்றிலிருந்து ஒரு புதிய பாதை, ஒரு புதிய இயக்கம், அடிப்படையில் இருந்து ஒரு புதிய பரிணாமத்தோடு பார்க்கக்கூடிய விதத்தில் தான் நம்முடைய செயல் இருக்கும்.

எல்லோரும் சேர்ந்து இதை ஆரம்பிக்க வேண்டும் என்பது என்னுடைய பெரிய ஆசை. என்னுடைய அரசியல் பாதை எளிதானது கிடையாது. ஒரு எளிதான கிராமத்தில் பிறந்து சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன். 2009-ல் நான் படிக்கும்போது தேமுதிகவில் 3 மாத காலம் இன்டர்ன்ஷிப் செய்திருக்கிறேன். அதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து பாஜகவில் இணைந்து 6 ஆண்டுகள் இருந்திருக்கிறேன்.

தேமுதிகவில் இன்டர்ன்ஷிப்

தற்போது தனித்துவமான இயக்கத்தை மக்கள் முன்னாடி வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 25 வயதில் விஜயகாந்தின் கட்சியில் இன்டன்ஷிப் செய்தது எனது பாக்கியம். ஒரு புதிய பாதையை உருவாக்க முடியுமா என்று 17 ஆண்டு காலம் போராடி கொண்டிருக்கிறேன். நான் பாஜகவில் இணையும் முன் எனக்கு ரஜினிகாந்த் அழைத்தார்.

எனக்கும் அவருக்கும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. அவர் அரசியலுக்கு வர இருக்கும்போது கூட நான் அதுதொடர்பாக பேசியிருக்கிறேன். அவர் இயக்கத்தில் சேர வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது 3 விஷயங்கள் தான் எனக்கு தோன்றியது.

ரஜினிகாந்த் என்னை அழைத்தார், ஆனால்.!

சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவது நல்லது. ஆனால் அவருக்கு அது நல்லது கிடையாது. கோவிட் சமயத்தில் அவருக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதேபோல அண்ணாமலை பாஜகவில் இணையும்போது சந்தோஷ் ஐயாவிடம் வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதனால் ரஜினிகாந்த் அழைத்தபோது என்னால் வர முடியாது என்று மறுத்து மன்னிப்பு கேட்டேன்.

சில யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதை சொல்கிறேன். வேறு எந்தக் காரணமும் கிடையாது. தமிழ்நாட்டை நான் எந்தக் காரணத்திற்காகவும் விட்டுக்கொடுத்ததே கிடையாது. சிலர் என்னை தமிழனா? இந்தியனா என்று கேட்பார்கள். நான் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று படித்திருக்கிறேன், பணிபுரிந்திருக்கிறேன். அதனால் நான் எப்போதும் சொல்வேன் நான் பெருமைமிகு இந்தியன். ஒரு பாரம்பரிய தமிழன் என்று தான் சொல்வேன்.

அண்ணாமலை
அண்ணாமலை

என்னுடைய கருத்து வேறுபாடுகளை..

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தோடு பாஜக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் உள்ளாட்சி தேர்தலில் தனியாக போட்டியிட்டோம். மோடி ஐயா மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கக்கூடிய மனிதன் நான். எனக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை மிகப்பொறுமையாக 18 மாதங்களாக மூத்த தலைவர்களிடம் சொல்லிக்கொண்டு வந்தேன்.

டிசம்பர் 4 ஆம் தேதி பாஜகவிடம் சொன்னேன் நான் கட்சியில் இருந்து வெளியே செல்ல இருக்கிறேன். இப்போதே உங்களிடம் சொல்லிவிடுகிறேன் என்று சொன்னேன். ஆனால் தேர்தல் பணியை முடித்துவிட்டு செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். ஒரு உண்மைத் தொண்டனாக கட்சி பணியை செய்துவிட்டுதான் வெளியே வர வேண்டும் என்றுதான் பணியாற்றினேன்.

அன்போடு அரசியல் இயக்கம்

அடுத்து என்ன செய்யப்போகிறோம், ஆனந்தமாக அன்போடு அரசியல் இயக்கத்தை நாம் தொடங்க இருக்கிறோம். அடுத்து நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் நம்முடைய கட்சி போட்டியிடும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்கு நாம் தயாராக வேண்டும். நிறைய தலைவர்களைத் தயார்படுத்த வேண்டும். அதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். எல்லோருக்கும் அரசியலைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வர வேண்டும். நம்முடைய இயக்கம் அரசியல் கட்சியாக மாறும்போது மக்கள் அந்தத் தரத்தை பிரித்து பார்ப்பார்கள். தமிழகத்திற்கு மாற்றம் தரவேண்டும் என்று நினைக்கிறேன். முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டு வந்து பிறகு அரசியல் கற்றுக்கொடுத்து கட்சியாக மாற்றுவேன்.

அண்ணாமலை
அண்ணாமலை

நமது அரசியல் இயக்கம் தொடக்கம்!

எல்லோரையும் அரசியலுக்கு கொண்டு வர வேண்டும். நிரந்தர எம்எல்ஏ, நிரந்தர தலைவர் என்ற கட்டமைப்பை உடைக்க வேண்டும். யாருக்கும் நாற்காலி நிரந்தரம் இல்லை. புதியவர்கள் வந்துகொண்டே இருக்க வேண்டும். நம்மை தாண்டி இந்த இயக்கம் நிற்க வேண்டும். ஏற்கனவே நான் தொடங்கிய லிங்க்கை தருகிறேன். அதில் இணையுங்கள்.

இன்றிலிருந்து நமது அரசியல் இயக்கம் தொடக்கம். உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் ஆவோம். நாம் யாருக்கும் போட்டி கிடையாது. ஆளும் கட்சி, எதிர்கட்சி எல்லோரும் அவர்களுடைய கொள்கையை சொல்லட்டும். வருகின்ற காலத்தில் நாம் நம்முடைய கொள்கையை இணைந்து சொல்வோம். பொறுமையாக சரியாக செயல்படுவோம். மாறுவோம்,மாற்றுவோம்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"இந்தியா 'விஸ்வகுரு' ஆவதற்கான வலிமையும் கட்டமைப்பும் நம்மிடம் இல்லை" – RSS தலைவர் மோகன் பகவத்

'இந்தியா உலக அரங்கில் ஒரு வலிமைமிக்க நாடாக மாறுவதையும், மறுமலர்ச்சி அடைவதையும்...

ஸ்டாலின் படத்துடன் வந்த திமுக மேயர்; திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் என்ன நடந்தது?

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்த பிறகு, திண்டுக்கல்...

மதுரை மாநகராட்சி: ரூ. 200 கோடி முறைகேடு புகாரில் தீவிர விசாரணை; அதிமுக கவுன்சிலர்கள் DIG-யிடம் மனு

கடந்த வருடம் மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான சொத்து வரி வசூல் மென்பொருளில்...

பிரவீன் சக்கரவர்த்தி பதிவு 'அதிக பிரசங்கித்தனம்' – கண்டனம் தெரிவித்த சிபிஎம் சண்முகம் – காரணம் என்ன?

தமிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை தங்களின் கூட்டணி கட்சியான...