அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் ‘நமது அம்மா’. இந்த நாளிதழ் தற்போது அதிமுகவின் ஒரு அணியான சி.வி.சண்முகம் & டீமின் கைகளுக்குச் சென்றுவிட்டது.
அதனால், ‘நிறுவனர் – எடப்பாடி பழனிசாமி’ என்று அந்த நாளிதழில் இடம்பெற்று வந்த பெயர், தற்போது ‘நிறுவனர் – எஸ்.பி.வேலுமணி’ என்று மாறியுள்ளது.
இதையடுத்து அதிமுகவின் இன்னொரு அணியான கே.பழனிசாமி & டீம் ‘போர்வாள்’ என்கிற புதிய நாளிதழை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து அதிமுக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது…
“மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் பழனிசாமி அவர்கள், இன்று (20.05.2026), சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான “போர்வாள்” தமிழ் நாளிதழை அறிமுகம் செய்து வெளியிட்டார்கள்.
இந்நிகழ்வின் போது கழகத்தின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்”.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், இன்று (20.05.2026), அஇஅதிமுக தலைமைக் கழகச் செய்திகள், கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிக்கைகள், கழகத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழக மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்து வழங்கும்… pic.twitter.com/QXwmDbx7jB
— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) May 20, 2026




