25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

தொகுதி மறுசீரமைப்பு: `தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி' – எதிர்ப்பு கிளம்புவது ஏன்?

Date:

`அனைத்துக் கட்சிக் கூட்டம்’ – முதல்வர் அறிவிப்பு

தொகுதி மறுசீரமைப்பு, `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறையை கொண்டுவர பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதனால், ‘மாநில அரசுகளின் உரிமை பறிபோகும்’ என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த சூழலில் கடந்த 25.2.2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “தமிழகம் இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே வரும் 5.3.2025 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதாக அறிவிக்கிறோம்.

புதிய நாடாளுமன்றம் – தொகுதி மறுசீரமைப்பு

இதற்கு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40 கட்சிகளையும் அழைக்க முடிவு செய்துள்ளோம். அவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடப்போகிறோம். இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஆலோசிக்கப்படும். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

`மக்களவை தொகுதிகள் குறையும் அபாயம்’ -ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதனை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்காக முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 தொகுதிகளை இழக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி தமிழகத்தில் 31 தொகுதிகள் தான் இருக்கும் என்ற சூழல் உருவாகும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் இருந்து அதிக பிரதிநிதிகள் இருப்பார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும்.

முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்த கவலை மட்டும் அல்ல. இது மாநிலத்தின் உரிமை சார்ந்த கவலை என்பதை மறந்துவிடக் கூடாது. ஆகவே, மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அரசியல் கடந்து, கட்சிகளை மறந்து பங்கேற்று குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.

தொகுதி மறுசீரமைப்பு ஏன்?

இதன் பின்னணி குறித்து பேசும் விவரப்புள்ளிகள், “தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, `நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும். அதற்கு ஏற்ற வகையில்தான் புதிய நாடாளுமன்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்றார். புதிய நாடுமன்றத்தில் மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 384 பேரும் அமரும் வகையில் இடவசதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது 543 மக்களவை உறுப்பினர்களும், 245 மாநிலங்களவை உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தசூழலில்தான் புதிய நாடாளுமன்றம் கூடுதல் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். முன்னதாக ஒவ்வொரு பத்தாண்டிற்குப் பிறகும் நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது. 1975-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மக்கள் தொகை கட்டுப்பட்டுத் திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்தார். அப்போது தொகுதிகள் மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என திருத்தம் செய்யப்பட்டது.

2021-ம் ஆண்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் மீண்டும் 25 ஆண்டுகளுக்கு தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டது. இது வரும் 2026-ம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவே பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

மக்கள் தொகை

இந்தசூழலில் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிக்கு மறுசீரமைப்பு செய்யப்பட்டால் அது தென் மாநிலங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதாவது மக்கள் தொகை அதிகம் கொண்ட பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிக மக்களவை தொகுதிகள் சென்றுவிடும். அதேநேரத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை மிகவும் சரியான முறையில் பின்பற்றி வரும் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்” என்றனர்.

எதிர்ப்பு கிளம்புவது ஏன்?

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை நியாயமாக பின்பற்றியதற்காக, தமிழகத்திற்கு கொடுக்கப்படும் தண்டனையா இது?. மத்திய அரசின் இந்த நடவடிக்கையினால் மொத்த தென் மாநிலக்களுக்கே கூடுதலாக 35 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் 150 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்கிறார்கள்.

குபேந்திரன்

இதற்கிடையில் தமிழகம் 8 இடங்களை இழக்கும் என்கிறார்கள். அதேநேரத்தில் மொத்தமாக 888 இடங்கள் வரும். இதில் பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றாலே ஆட்சியை பிடித்துவிடலாம். அப்போது தென் மாநிலங்களிலிருந்து வாக்குகள் கிடைக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் சில மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். பல மாநிலங்கள் பயனடையும். இது மிகமிக மோசமான திட்டம்.

இந்த நடைமுறையை 2029-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் இடையே பகை ஏற்படும். எனவே தென் மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு உத்திரபிரதேசத்தில் 80 இடங்களை 120 ஆக உயர்த்துகிறீர்கள் என்றால் தமிழகத்தில் 38-ல் இருந்து 55 ஆக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்னைக்கு முடிவு கிடைக்கும். இல்லையென்றால் தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் என்கிற பாகுபாட்டை கொண்டுவரும்” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....