19
July, 2026

A News 365Times Venture

19
Sunday
July, 2026

A News 365Times Venture

தூத்துக்குடி: காதலிக்கச் சொல்லி வற்புறுத்திய சமையல்காரர்; கைது செய்த சிங்கப்பெண் அதிரடிப்படை

Date:

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். சமையல் மாஸ்டராக வேலை செய்து வரும் இவருக்குத் திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுத் தனியாக வாழ்ந்து வருகிறார்.

தூத்துக்குடி

இந்த நிலையில், சொக்கலிங்கம் தனது பகுதியில் உள்ள கல்லூரி மாணவி ஒருவரைக் காதலிக்குமாறு வற்புறுத்தி, தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், அத்துடன் அந்த மாணவியிடம் ஆபாசமான செய்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இதனால் மாணவியின் தந்தை, இதுகுறித்து சிங்கப்பெண் அதிரடிப்படையின் கட்டணமில்லா உதவி எண்ணான 1091-க்குத் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். இப்புகாரைத் தொடர்ந்து, செக்காரக்குடி கிராமத்திற்கு விரைந்த சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி தலைமையிலான போலீஸார், சொக்கலிங்கத்தைக் கைது செய்தனர்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

பின்னர் அவர், தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். சொக்கலிங்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மழைக்காலக் கூட்டத் தொடர்: `திமுக-வின் விரிசல்; திரிணாமுல் பிளவு'- பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக?

காத்திருப்பில் 2 மசோதாக்கள்நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி...

“தவெக எம்எல்ஏ-க்கள் திமுக-வுக்கு வருவாங்க; 6 மாசத்துல ஆட்சி மாற்றம் நடக்கும்" – அனிதா ராதாகிருஷ்ணன்

தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில்...

அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு லஞ்சம்? புகார் கூறிய பெண் வழக்கறிஞர் தவெக-வில் இருந்து நீக்கம்

`ஊழலற்ற நேர்மையான ஆட்சி’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து ஆட்சியைப் பிடித்தது த.வெ.க....