17
June, 2026

A News 365Times Venture

17
Wednesday
June, 2026

A News 365Times Venture

திருவாரூர்: ”பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” – ஜி.கே.வாசன் ஆவேசம்

Date:

திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் என்கிற அமைப்பு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”ஹைட்ரோ கார்பன் திட்டம் கூடாது என்பதிலே த.மா.காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.

மேகதாது அணைகட்ட அனுமதிக்கக் கூடாது. இந்த மண்டலம் பாலைவனமாகிவிடும். இரு மாநிலங்களுடைய உறவு பிரச்னை மட்டுமல்ல உயிர் பிரச்னையும் கூட.

திருவாரூர்-செய்தியாளர் சந்திப்பில் ஜி.கே.வாசன்

தமிழக அரசு விவசாயிகளுடைய எண்ணங்களுக்கு 100% பூர்த்தி செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். விவசாயக் கடன் முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளுடைய எண்ணம். இதனை த.மா.கா-வும் தொடர்ந்து வலியுறுத்துகிறது.

தண்ணீரும் ஜூன் 12 ஆம் தேதி திறந்துவிடாத சூழலிலே விவசாயிகள் கஷ்டத்திலும், நஷ்டத்திலும் இருக்கிறார்கள். விவசாயிகளுடைய குறைகளை 100% தீர்க்க வேண்டியது அரசின் கடமை. குழந்தைகள், பெண்கள் தொடர்பான பாலியல் தொல்லை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது அரசின் கடமை.

சமீப நாள்களாக குழந்தைகளை வெளியிலே விடுவதற்குக் கூட பெற்றோர்கள் அச்சப்படக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த அச்சத்திற்கும் பயத்திற்கும் காரணம் கஞ்சா போதை பொருள்கள். சென்னையில் மட்டும் 24 மணி நேரத்திலே 12 குற்றங்கள் நடைபெற்றுள்ளது.

எதிர்க்கட்சி என்ற முறையிலே அரசைக் குறை கூற விரும்பவில்லை. தப்புக்கள் நடக்கின்றன என்று தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் கூறுகின்றன நானும் கூறுகிறேன். மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசுதான். இது போன்ற தவறான செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

அரசு இதில் உரிய தனி கவனம் செலுத்தி முற்றுப்புள்ளி வைப்பதற்கான நிலையை ஏற்படுத்த வேண்டும். தவறு செய்பவர்களை நேரடியாகப் பார்த்தால் சுட்டுக் கொல்ல வேண்டும். அவர்கள் உயிரோடு இருக்கக் கூடாது. அதில் மாற்று கருத்தே இருக்க கூடாது. அவர்களுக்கு யாரும் வாதாடக் கூடாது.

மிருகத்தனமான செயலிலே ஈடுபடும் போது வேறு வழி இல்லை. மூன்று வயது பச்சிளம் குழந்தையை நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. இது போன்ற நிலை இருக்கவே கூடாது. இந்த நிலைக்குக் காரணம் தனிமனித ஒழுக்கம்தான். தனிமனித ஒழுக்கம் கெடுவதற்குக் காரணம் போதைப்பொருள் மற்றும் குடி. இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமை.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த ஜனநாயகத்தில தனி மனிதர்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது. இந்தக் கட்சியில இருந்து அந்தக் கட்சிக்குப் போகலாம் அந்தக் கட்சியிலிருந்து இந்தக் கட்சிக்குப் போகலாம். தேர்தலுக்கு முன்பு ஒரு கட்சியில் இருந்து எதிர்த்து வேலை செய்யலாம். தேர்தலுக்குப் பிறகு ஆட்சியாளர்கள் இருக்கின்ற இடத்திற்குப் போய் அவர்களோடு இணைந்து கொள்ளலாம்.

இதை தினம்தோறும் எல்லாக் கட்சிகளும் சந்திப்பதைப் பார்த்து கொண்டிருக்கிறோம். இந்தியா பொருளாதார ரீதியாக உயர வேண்டும். பொருட்களுடைய விலை குறைய வேண்டும், மக்கள் சந்தோஷமாக இருக்க நாம் வேண்டிக் கொள்ள வேண்டும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Celebi: "இந்தியாவில் ஒரே நாளில் ரூ. 4,700 கோடி வணிகத்தை இழந்தோம்" – துருக்கி விமான நிறுவனம்

கடந்த 2025 ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய...

“ஈரானுக்கு அமெரிக்கா 300 பில்லியன் டாலர் வழங்குகிறதா?" – அமெரிக்கத் துணை அதிபரின் விளக்கம் என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக,...

ஆகாஷ் டெலிசன் காவல் மரணம்: "உடலை அரசே கண்ணியமான முறையில் அடக்கம் செய்யலாம்" – நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை அருகேயுள்ள மானாமதுரையில் கொலை செய்ய முயற்சித்த வழக்கு ஒன்றில் ஆகாஷ்...

கிருஷ்ணகிரி: "மயானத்திற்குச் செல்ல வழி இல்லை" – இறந்தவர் உடலைப் புதைக்க சாலையில் குழி தோண்டிய மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகேயுள்ள பொம்மதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த...