21
September, 2026

A News 365Times Venture

21
Monday
September, 2026

A News 365Times Venture

திருவண்ணாமலை: பள்ளி மாணவன் துடைப்பத்தால் தாக்கப்பட்ட விவகாரம் – சத்துணவு பணியாளர்கள் இருவரும் கைது

Date:

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குஉட்பட்ட செங்குணம் கொல்லைமேடு பகுதியில் செயல்பட்டுவரும் அரசு தொடக்கப் பள்ளியில், மாணவ – மாணவிகளுக்காக வழங்கப்படும் சத்துணவு முட்டைகளை சத்துணவு தயாரிக்கும் பெண் பணியாளர்களே வெளியில் விற்பனை செய்துவிடுவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. இந்தச் சூழலில், அந்த அரசுப் பள்ளியில் சத்துணவு வழங்கியபோது முட்டை கேட்ட ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு `இல்லை’ எனச் சொல்லியிருக்கின்றனர். ஆனால், சமையல் கூடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த முட்டைகளை அந்த மாணவன் கண்டுபிடித்து கேள்வியெழுப்பியிருக்கிறான்.

இதனால் கோபமடைந்த சத்துணவு சமையலர் லட்சுமி, சமையல் உதவியாளர் முனியம்மாள் ஆகிய இருவரும் வகுப்பறைக்குள் புகுந்து மாணவனை துடைப்பத்தால் தாக்கிய காணொளியும் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு பெண் பணியாளர்கள்

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணையின்போது, சத்துணவு பணியாளர்கள் இருவரும் தங்களின் தவறை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, போளூர் வட்டார வளர்ச்சி அலுவலரால் அவர்கள் இருவரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், பெண் பணியாளர்கள் இருவர் மீதும் பி.என்.எஸ் சட்டப்பிரிவு 131 மற்றும் சிறார் பராமரிப்புப் பாதுகாப்பு சட்டப்பிரிவு 75 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, போளூர் காவல் நிலையப் போலீஸாரால் இரண்டு பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மக்கள், பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர்...

"ஆதரவு தரோம்னு சொல்லிட்டு சிலர் நைட்டோட நைட்டா ஓடிட்டாங்க.!"- தவெக கூட்டணியை விமர்சித்த உதயநிதி

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக மாவட்ட - ஒன்றிய...

ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்க வேண்டுமானால் அமெரிக்காவிற்கு 7 நிபந்தனைகள் – ஈரான் புது நகர்வு

ஈரான் போரைத் தாண்டி உலக நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக இருப்பது ஹார்முஸ்...

'ரஷ்ய தடைச் சட்டத்திற்கு நன்றி; பல மாற்றங்கள் வரலாம்'- ட்ரம்பிடம் பேசிய பின் ஜெலன்ஸ்கி சொல்வது என்ன?

2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது. இன்னும்...