20
November, 2026

A News 365Times Venture

20
Friday
November, 2026

A News 365Times Venture

`திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்!' – உச்ச நீதிமன்றம் அனுமதி

Date:

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற மதுரை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கபட்டு வந்தன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், “உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடைவிதிக்கப்படுவதோடு, இது தொடர்பாக கூடுதல் ஆவணங்களைச் சமர்பிக்க 6 வார கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். தற்போதைய உத்தரவு இடைக்கால உத்தரவு மட்டுமே, வழக்கின் விசாரணையை பாதிக்காது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் வரும் 24.11.2026 அன்று அரசாங்க பாதுகாப்போடு கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதியளிக்கப்படுகிறது. தேவசம் வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நபர்களால் விளக்கேற்றுதல் செய்யப்படும். மதுரை காவல் ஆணையர் தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும். தீபம் ஏற்றியதை உறுதி செய்து மாவட்ட ஆட்சியர் 3 நாள்களில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம், தேவைப்பட்டால் சி.ஆர்.பி.எஃப் உதவியை நாடலாம்.

உச்ச நீதிமன்றம்

தேவைப்பட்டால், மத்திய அரசும் பாதுகாப்பை நியமிக்கலாம். விளக்கேற்றும் சடங்கிற்குப் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” எனக் கூறி, இறுதி விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம்  அனுமதியளித்த நிலையில், மதுரையில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Guidance TN விவகாரம்: "தமிழகத்தின் தொழில் முதலீட்டு ரகசியங்கள் கசிந்தனவா?" – டிடிவி தினகரன் கேள்வி

தமிழ்நாட்டிற்கு வரும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வரும்...

'பணிநீக்கமா, ராஜினாமாவா?' Guidance Tamilnadu சர்ச்சையில் டி.ஆர்.பி.ராஜா கேள்வி!

கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்திலிருந்து தமிழ்நாட்டின் முதலீட்டு ரகசியங்கள் ஆந்திராவிற்குக் கசிந்துள்ளதாகக் குற்றச்சாட்டு...

"குறுவை போச்சு; சம்பாவும் கருகுது; விவசாயிகளுக்கு Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?"- ஸ்டாலின்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த மூன்று...

"ஆந்திராவின் அதிர்ச்சியூட்டும் ரகசிய முதலீட்டு வியூகம் லீக் ஆகிவிட்டது!" – ஆந்திரா அமைச்சர் கிண்டல்

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திரா பக்கம் செல்கின்றன. தமிழ்நாடு...