19
April, 2026

A News 365Times Venture

19
Sunday
April, 2026

A News 365Times Venture

திருச்சி: 'இன்று விஜய் பரப்புரை… 27 கட்டுப்பாடுகளுடன் அனுமதி!' எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Date:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசார களம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. த.வெ.க தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் அவர் பிரசாரம் செய்த நிலையில், இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக விஜய், சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று மதியம் 2.00 மணியளவில் திருச்சிக்கு வருகிறார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் சாலை, கே.கே.நகர் பேருந்து நிலையம், கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடியே பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

vijay

மேலும், விமானநிலையம், வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை, கோழிப்பண்ணை சாலை, கொட்டப்பட்டு, விமான நிலையம் வரை சாலையில் வலம் வருகிறார். த.வெ.க தலைவர் விஜய் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய முறைப்படி தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கான அனுமதியை 27 கட்டுப்பாடுகளுடன் மாநகர காவல் துறையினர் வழங்கியுள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

’மாணிக்கமாக இருந்த எங்களை பாஜக, பாட்ஷாவாக மாற்றிவிட்டது’ – மு.க.ஸ்டாலின் காட்டம்

கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர்...

நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, பாஜக பறக்கவிட துடித்த காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: மு.க. ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி...

எடப்பாடி: "குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்கு" – சுயேச்சைக்கு விஜய் ஆதரவு

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் த.வெ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல்...