21
September, 2026

A News 365Times Venture

21
Monday
September, 2026

A News 365Times Venture

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மக்கள், பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரசாரம்!

Date:

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 – ம் தேதி நடைபெற இருக்கிறது. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க- வில் இணைந்த சத்யபாமாவை வேட்பாளராக களமிறக்கியிருக்கிறது த.வெ.க.

அ.தி.மு.க வேட்பாளராக களத்தில் நின்று வெற்றி பெற்ற ஒரே மாதத்திற்குள் பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க- வில் இணைந்த சத்யபாமாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது அ.தி.மு.க, த.வெ.க மட்டுமின்றி சில கிராமங்களிலும் அதிருப்தி நிலவி வருகிறது. ‘வாக்கு சேகரிக்க யாரும் வர வேண்டாம் ‘ என சில கிராமங்களில் பேனர் வைத்துள்ளனர்.

சத்தியபாமா

இந்த நிலையில், நேற்று தாராபுரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சத்தியபாமாவிற்கு எதிராக கூட்டத்தில் இருந்த சிலர் கோஷங்களை எழுப்பியுள்ளனர். குறிப்பாக உப்பாறு பாசனம் குறித்தும் குறித்து பல்வேறு கேள்விகளை விவசாயிகள் எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து சத்தியபாமா பதில் அளிக்க முயற்சி செய்தும் கூட்டத்தில் இருந்தவர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன‌.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ஆதரவு தரோம்னு சொல்லிட்டு சிலர் நைட்டோட நைட்டா ஓடிட்டாங்க.!"- தவெக கூட்டணியை விமர்சித்த உதயநிதி

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக மாவட்ட - ஒன்றிய...

ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்க வேண்டுமானால் அமெரிக்காவிற்கு 7 நிபந்தனைகள் – ஈரான் புது நகர்வு

ஈரான் போரைத் தாண்டி உலக நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக இருப்பது ஹார்முஸ்...

'ரஷ்ய தடைச் சட்டத்திற்கு நன்றி; பல மாற்றங்கள் வரலாம்'- ட்ரம்பிடம் பேசிய பின் ஜெலன்ஸ்கி சொல்வது என்ன?

2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது. இன்னும்...

அட்டைப்படம்

Source link