2
October, 2026

A News 365Times Venture

2
Friday
October, 2026

A News 365Times Venture

தாக்கப்பட்ட இந்திய விமானி Smit Machchhar இப்போது எங்கு இருக்கிறார்? – வெளியுறவுத் துறை விளக்கம்

Date:

ஃபிளைதுபாய் விமானம் ஒன்றில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரைச் சக விமானி கத்தியால் குத்தியிருந்தார்.

இதில் ஸ்மித் மச்சாருக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு, சவூதி அரேபியாவில் விமானம் தரையிறங்கியபோது, அவர் மோசமான நிலையில் இருந்தார் என்று விமானத்தில் ஸ்மித் மச்சாருக்குச் சிகிச்சையளித்த பல் மருத்துவர் ஷோட்டா மூசாயேவ் கூறியிருந்தார்.

தற்போது ஸ்மித் மச்சார் எப்படி இருக்கிறார் என்பதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்.

விளக்கம்

அந்த அறிக்கையில், “இந்தியக் குடிமகனும், ‘ஃபிளைதுபாய்’ FZ 1073 விமானத்தின் வீரம் நிறைந்த முதன்மை விமானியுமான கேப்டன் ஸ்மித் மச்சாரின் உடல்நிலையை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.

சவூதி அரேபியாவின் தபூக்கில் உள்ள மருத்துவமனையில் முதற்கட்ட மருத்துவச் சிகிச்சையைப் பெற்ற பிறகு, அவர் மேல்சிகிச்சைக்காகத் தற்போது அபுதாபிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான நமது இந்தியத் தூதர், மருத்துவமனையில் கேப்டன் மச்சாரை நேரில் சந்தித்து அவரது உடல்நலக் குறைபாடு குறித்துக் கேட்டறிந்தார்.

முன்னதாக, அவர் கேப்டனின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து, அவரது விரைவான குணமடைதலுக்கும் நல்வாழ்விற்கும் தேவையான அனைத்துச் சாத்தியமான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

அபுதாபியில் உள்ள நமது இந்தியத் தூதரகமும், துபாயில் உள்ள துணைத் தூதரகமும் இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன.

கேப்டன் ஸ்மித் மச்சாரின் இணையற்ற வீரத்தையும் தைரியத்தையும் நாங்கள் மீண்டும் ஒருமுறை போற்றி வணங்குகிறோம்.

அவரது இந்தச் சாகசச் செயலுக்காக உலகெங்கிலும் இருந்து அவருக்குக் கிடைத்து வரும் பாராட்டுகளுக்கும் ஆதரவிற்கும் நமது ஆழ்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"கைது செய்தாலும் போராடுவோம்" – தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட இருந்த அபிஜித் திப்கே கைது

மத்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்...

"2009 இல் நான் மத்திய அமைச்சராவது தடுக்கப்பட்டது" – என்ன சொல்கிறார் திருமாவளவன்?

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்காக தவெக சார்பில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின்...

"வி.டி.சதீசன் கூட்டணித் தலைவர்களிடம் ஆலோசிப்பதில்லை" – UDF ஒருங்கிணைப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. ஆட்சி அமைத்து...

`அதிமுகவும், தவெகவும் ஒன்று என்றால் தவெகவை கலைத்து விடுங்கள்!’ – முதல்வர் விஜய்யை தாக்கும் அதிமுக

புதுச்சேரியில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி,...