13
November, 2026

A News 365Times Venture

13
Friday
November, 2026

A News 365Times Venture

தவெக 6 மாத ஆட்சி: “முதல்வர் விழிப்புணர்வுடன் பணியாற்றுகிறார்; அடுத்த 6 மாதத்தில்.."- வைகைச் செல்வன்

Date:

தவெக அரசின் இந்த 6 மாதகால ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினோம். அந்த வகையில் முதல் பகுதியில் நாராயணன் திருப்பதியிடமும், அடுத்து அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், சபாநாயகருமான ஜெயக்குமாரிடமும், திமுக மாநிலங்களவை எம்.பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடமும் பேசினோம். அதன் தொடராக தவெக அரசுக்கு ஆதரவளித்துவரும் சிபிஐ தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வீரபாண்டியனிடம் பேசியிருந்தோம். இந்தப் பகுதியில் முன்னாள் அமைச்சரும், தவெக-வின் துணைப் பொதுச் செயலாளருமான வைகைச் செல்வனிடம் பேசினோம்.

முதல்வர் விஜய்

அவர், “கடந்த ஆறு மாத கால ஆட்சி குறித்த பார்வையில், சில குறைகள் இருந்தாலும் நிறைய நிறைகள் இருக்கின்றன. அந்தக் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பணிகளை நிச்சயமாக நாங்கள் மேற்கொள்வோம். இந்த ஆறு மாத கால நிர்வாகம் மிகவும் தூய்மையானதாகவும், நேர்மையானதாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக, ஒப்பந்தப் புள்ளிகள் அனைத்தும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுக்கால திமுக ஆட்சியில் ஊழலின் ஊற்றுக்கண் பெருக்கெடுத்து ஓடியது.

தற்போதுள்ள புதிய அரசு, அந்த ஊழலின் ஊற்றுக்கண்களை எங்கெல்லாம் ஓட்டைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் அடைத்துள்ளது. இதனால், கடந்த ஆறு மாதங்களாகத் தங்களால் எதையும் செய்ய முடியாமல் தாக்குப்பிடிக்க முடியாதவர்கள் கூக்குரலிடுகிறார்கள். குறிப்பாக, டெண்டரை யார் குறைவாகக் கோருகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஒப்பந்தப் புள்ளி விவகாரங்களில் எந்த ஒரு அமைச்சரும் தலையிடுவதில்லை. மேலும், சுமார் 165 ஏக்கர் அரசு மற்றும் கோயில் நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அரசுக்கு மீட்டுத் தரப்பட்டுள்ளன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

பள்ளிக் கல்வித்துறையில் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்குவது முதல் பணியிட மாறுதல்கள் வரை அனைத்தும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நடைபெறுகின்றன. எல்லாத் துறைகளிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இதனால், இடைத்தரகர்கள் மற்றும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் கூட்டத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளன. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், எங்காவது பிரச்னை எழாதா எனக் காத்திருக்கிறார்கள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முதன்முதலில் பிரதமரானபோது, “நான் ஏழைகளுக்காக ஆட்சி நடத்தினேன்; ஆனால் பணக்காரர்கள் ஒன்று சேர்ந்து என்னை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டார்கள்” என்று ஒரு கருத்தைக் கூறினார். அதேபோலத்தான், இன்று திமுகவும் அதிமுகவும் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளன. ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆறு மாத இடைவெளியில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடியும் என்பதால், அடுத்ததாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

கட்சியில் பலவீனமானவர்கள் யார் என்று பார்த்து அவர்களை விலைக்கு வாங்கலாம் என்று எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எளிய பின்னணியிலிருந்து வந்தவர்கள். விஜய் அவர்களை மட்டுமே நம்பித் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள். எனவே, எது உண்மை, எது பொய் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே, இது போன்ற சதிகளுக்கு யாரும் விலை போக மாட்டார்கள். முதல்வர் விஜய் நிர்வாகத்திற்குப் புதியவராக இருந்தாலும், கடந்த ஆறு மாத காலத்தில் நிர்வாக அனுபவங்களை நிறையக் கற்றுக்கொண்டுள்ளார்.

ஒரு நிர்வாகத்தை வலுவாக இட்டுச் செல்வதற்கு ஆட்சியாளர்களே மிக முக்கியக் காரணமாக இருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் திட்டங்களைச் செயல்படுத்தினாலும், ஒரு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே நிர்வாகம் இயங்குகிறது. ஒரு கட்சியின் கொள்கை, தேர்தல் அறிக்கை மற்றும் அக்கட்சி எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு ஆட்சியும் செயல்படும். அந்த வகையில், தற்போதைய ஆட்சியில் ‘சிங்கப் பெண் படை’, ‘அண்ணன் சீர்’, ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அருள் விக்னேஷ்

மேலும், படிப்படியாகப் பல திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு திட்டத்தையும் தனது நேரடிக் கவனத்திற்குக் கொண்டு சென்று, சிறிய தவறு கூட நேர்ந்துவிடக் கூடாது என்பதில் அவர் மிகத் தெளிவோடு இருக்கிறார். குறிப்பாக, மாணவர்களுக்கான சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு ஹீரோ நிறுவனத்திற்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல ஒவ்வொரு விஷயத்திலும் முதலமைச்சர் மிகவும் விழிப்புணர்வுடன் பணியாற்றி வருகிறார்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசு தயங்காது. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறார். மேலும், சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆதாரமில்லாமல் யார் மீதும் நாம் பழி சுமத்த முடியாது. ஒருவேளை அத்தகைய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சட்டமன்ற உறுப்பினர் என்று கூடப் பாகுபாடு பார்க்காமல் முதலமைச்சர் விஜய் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். ரவிசங்கர் மனு கொடுக்க வந்தவர்களைத் தாக்கியதாக ஒரு காணொளி வெளியாகி வருகிறது.

கார்த்திக்குமார் - ரவிசங்கர்
கார்த்திக்குமார் – ரவிசங்கர்

அவர் தாக்கும்போதே ஒருவர் அதைக் காணொளியாகப் பதிவு செய்கிறார் என்றால், அதன் பின்னணியில் ஏதோ ஒரு திட்டமிட்ட சதி இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, அங்கு என்ன நடந்தது என்பதன் உண்மைத்தன்மையை முழுமையாக ஆராய்ந்து, அவர் மீது தவறு இருப்பது உறுதியானால் நிச்சயமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விலைவாசி உயர்வு என்பது பணவீக்கத்தினால் ஏற்படுகிறது. இது இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதுமே நிலவும் ஒரு பொருளாதாரத் தேக்க நிலையாகும்.

பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம், நாட்டின் உற்பத்தித் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே பொருளாதார நிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்தப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும். வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பிறகு, சுமார் 90 நாட்களுக்குள் பணவீக்கம் சரிசெய்யப்பட்டு விலைவாசி கட்டுக்குள் வரும். மேலும், போதிய மழையின்மை, விவசாய உற்பத்திக் குறைவு மற்றும் தொழிற்சாலைகளுக்கான செலவினங்கள் கூடியதன் காரணமாகவும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாத காலத்திற்குள் இவை அனைத்தும் சரிசெய்யப்பட்டு விடும்.

வைகைச் செல்வன்
வைகைச் செல்வன்

சட்டம்-ஒழுங்கு விவகாரத்தைப் பொறுத்தவரை, தற்போது குற்றங்களின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. குற்றப் பின்னணி கொண்ட 3,000-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகத்திற்கு இடமானவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், குற்றச் செயல்கள் படிப்படியாக முழுமையாகக் குறைந்துவிடும். முந்தைய ஆட்சிகளைப் போலக் காவல்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, ஆளுங்கட்சியினர் தவறு செய்தால் அவர்களைப் பாதுகாக்கும் போக்கு இந்த அரசில் இல்லை.

தற்போது காவல்துறை முழுச் சுதந்திரத்துடன், யாருடைய தலையீடுமின்றித் தனிப்பட்ட முறையில் நேர்மையாகச் செயல்பட்டு வருகிறது. அதன் பலன் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் மக்களுக்குத் தெளிவாகத் தெரியவரும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருப்பரங்குன்றம்: "'தீபத் தூண்' கட்டுக்கதை; நூற்றாண்டு மரபு மாறாது"- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது...

"ஒரே நாளில் ஆந்திராவில் ரூ.5.35 லட்சம் கோடி மதிப்பிலான MoU; தவறவிட்ட தமிழ்நாடு?" – TRB ராஜா

ஒரே நாளில், ஆந்திரப் பிரதேசத்தின் ரூ.5.35 லட்சம் கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு...

"மேக்கேதாட்டு அணை கட்ட சட்ட ரீதியாக உதவுங்கள்" – மோடியிடம் உதவி கேட்ட DK சிவகுமார்

மேக்கேதாட்டு அணை கட்டுவதை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார் கர்நாடகா முதலமைச்சர்...

பொன்னமராவதி: குடியிருப்பு பகுதியில் இடையூறாக இரும்பு குடோன்; மக்கள் சிரமம் – அதிகாரிகள் சொல்வதென்ன?

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அண்ணாநகரின் குடியிருப்புப் பகுதியில் இயங்கி வரும் பழைய...