12
November, 2026

A News 365Times Venture

12
Thursday
November, 2026

A News 365Times Venture

தவெக 6 மாத ஆட்சி: “முதலமைச்சரின் கட்டுப்பாட்டை மீறி நிர்வாகம் சென்றுவிட்டது.!" – அதிமுக ஜெயக்குமார்

Date:

தவெக அரசின் இந்த 6 மாதகால ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினோம். அந்த வகையில் முதல் பகுதியில் நாராயணன் திருப்பதியிடம் பேசியவை கட்டுரையாக வந்திருந்தது.

இந்தப் பகுதியில் அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், சபாநாயகருமான ஜெயக்குமாரிடம் பேசினோம் அவர், “வழக்கமாகத் தீபாவளிப் பண்டிகையையொட்டி நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகும். ஆனால், இந்த முறை அவரது படம் வெளியாகாத குறையைப் போக்கும் விதமாக, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் களம் இறங்கிவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தமிழ்நாடு முழுவதும் துப்பாக்கி கலாச்சாரம், உருட்டுக்கட்டை, கத்தி, வீச்சரிவாள் ஆகியவற்றின் பயன்பாடு சர்வசாதாரணமாகிவிட்டது. மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் இருக்கிறாரா என்ற கேள்வியே எழுகிறது.

முதல்வர் விஜய்

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், `நாடு சுடுகாடாகப் போனாலும் கவலையில்லை’ என்ற போக்கில் ஆட்சி நடைபெறுவது வேதனையளிக்கிறது.
இத்தகைய அசாதாரணச் சூழலில், சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து முதலமைச்சர் கண்டிக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட எண்ணமே அவரிடம் இல்லை. மாறாக, தவறு செய்பவர்களை அழைத்து, `நீங்கள் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள், வாழ்த்துக்கள்’ என்று கூறி, கூடுதலாகத் தீபாவளி வாழ்த்துக்களையும் பரிசுகளையும் வழங்குவது எவ்வளவு முரணான செயல் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முதலமைச்சரின் கட்டுப்பாட்டை மீறி நிர்வாகம் சென்றுவிட்டதையே காட்டுகிறது. `நாம் எது செய்தாலும் தலைமை நம் மீது நடவடிக்கை எடுக்காது’ என்ற துணிச்சல் அவர்களுக்கு வந்துவிட்டது.

2011-ம் ஆண்டு நான் சபாநாயகராக இருந்தபோது, மேயர் உட்பட மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்றனர். ஆனால், வெற்றி பெற்ற பிறகு கவுன்சிலர்களின் அத்துமீறல்கள் தாங்க முடியாத அளவுக்குச் சென்றன. மிரட்டிப் பணம் பறிப்பதாகப் பல புகார்கள் எழுந்தன. இது குறித்து உடனடியாக என்னிடம், `கவுன்சிலர்கள் கூட்டம் நடத்த வேண்டும், அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டார். அதன்படி, அனைத்துக் கவுன்சிலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, சென்னை தியாகராயர் அரங்கத்தில் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பேசிய அம்மா, “நீங்கள் ஒழுங்காக இருக்கிறீர்களா இல்லையா? இல்லையென்றால் உங்கள் தோலை உரித்துவிடுவேன். கட்சி நடவடிக்கை மட்டுமல்லாமல், வேறு விதமான கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

தேவைப்பட்டால் மாநகராட்சியையே கலைத்துவிடுவோம். அடக்கி வாசியுங்கள், இல்லையென்றால் அடக்கப்படுவீர்கள்” என்று கடுமையாக எச்சரித்தார். அவர் எடுத்த அந்த நடவடிக்கையால், அத்துமீறல்கள் உடனடியாகக் கட்டுக்குள் வந்தன.
ஆனால், தற்போதைய முதலமைச்சர் ஏன் அத்தகைய கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.

அரசு அறிவித்துள்ள ‘தாய்மாமன் சீர்’, பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கான சலுகைகள் போன்றவை ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்தான். மின்சாரத் துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே, வீட்டில் உள்ள அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து வைத்த பிறகும் மீட்டர் ஓடுவதாகப் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

தடையற்ற மின்சாரம் வழங்க முடியாமல், அதிக விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்கி, மக்களுக்கு மின்கட்டணச் சுமையை அதிகரித்துள்ளது இந்த அரசு. கடந்த ஆறு மாத கால ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளது. பாலியல் வன்கொடுமைகள், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. காவல் நிலையங்களில் லாக்கப் மரணங்கள் நிகழ்வதும், சிறையிலிருந்தே கைதிகள் தப்பி ஓடுவதும் தொடர்கதையாகிவிட்டது. மறுபுறம், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழக வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலமான ஆறு மாதங்களில், இவ்வளவு மோசமான பெயரை எடுத்த ஆட்சி இதுவாகத்தான் இருக்கும்.

விலைவாசி உயர்வு

மீன்வளத் துறையைப் பொறுத்தவரை, நான் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையே இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். புதியதாக எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. பட்ஜெட் மானியக் கோரிக்கைகளில்கூட மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. காலத்திற்கேற்பப் புதிதாகச் சிந்திக்கும் திறன் இந்த அரசுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது.

எங்களது முந்தைய ஆட்சி அனுபவத்தின் அடிப்படையில், முதலாவதாக, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, குடிமக்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் பிரச்னைகள் தலைவிரித்தாடுகின்றன. குறிப்பாக, தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தவறுகளை நியாயப்படுத்துவதற்காகவா ஒரு அரசாங்கம் இருக்கிறது? “எங்கள் ஆட்சியில் குற்றங்களே நடக்கவில்லை” என்று சொன்னால்தான் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். அதைவிடுத்து, “கடந்த ஆட்சியில் இதைவிட அதிகமாக நடந்தது” என்று ஒப்பிட்டுப் பேசுவது அரசின் பலவீனத்தையே காட்டுகிறது. மக்களுக்கு அரசு மீது இருந்த பாதுகாப்பு குறித்த நம்பிக்கை போய்விட்டது. அதை முதலில் மீட்டெடுக்க வேண்டும்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் தற்போது நிலவும் கடுமையான விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு விஜயைப் பார்த்தாலே போதும் என்ற மனநிலை மக்களிடம் இருந்தது; ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அத்தியாவசியப் பொருட்களான அரிசி விலை உயர்ந்து, வீட்டில் மக்கள் பசியோடு இருக்கும் சூழலில், “நாங்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, எங்களுக்கு ‘விஜய்’ தான் வேண்டும்” என்று மக்கள் எவ்வளவுநாள் சொல்லமுடியும்? எனவே, அன்றாட வாழ்க்கைப் பாதிப்புகளே மக்களின் மனமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துவிடும்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TVK MLA Meeting: "விஜய் அனல் கக்கினார் என Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?" – உதயநிதி

முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஈ.சி.ஆரில் தனியார் ரெசார்ட்டில்...

'MLA மீது நடவடிக்கை எடுத்திருக்கனும், ஆனா தீபாவளிப் பரிசு கொடுத்து.!'-விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்

முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஈ.சி.ஆரில் தனியார் ரெசார்ட்டில்...

அன்று அனுதாபம், இன்று ஆடம்பரம் – கார் பயணத்தால் விமர்சனத்துக்குள்ளான தவெக MLA தென்றல் குமார்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.வி.குப்பம் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ தென்றல் குமார்...

FIIs தொடர் முதலீடு: வரிக் குறைப்பிற்காக நிபுணர்கள் செய்த 'லாபி' – பிரவீன் சக்கரவர்த்தி குற்றச்சாட்டு

இந்த நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியாவில்...