21
June, 2026

A News 365Times Venture

21
Sunday
June, 2026

A News 365Times Venture

`தவெக-வில் இணைய காரணம் இதுதான்..!' – அதிமுக-விலிருந்து விலகிய இசக்கி சுப்பையா

Date:

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் நேற்று (மே.25) இணைந்தனர்.

இந்நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்து, த.வெ.கவில் இணைந்திருக்கிறார்.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகியது குறித்து பேசிய இசக்கி சுப்பையா, “என் தொகுதி மக்களின் நலனுக்காகத் தான் நான் என் பதவியை ராஜினாமா செய்தேன்.

தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா

கடந்த 5 வருடங்களாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். என்னால் எந்தவிதமான நலத்திட்டங்களையும் அங்கு கொண்டு வர முடியவில்லை.

குறிப்பாக முன்னாள் முதல்வர் தொகுதிக்கான கோரிக்கையை கேட்டார். ஆனால் கோரிக்கையை கொடுத்ததும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

என் தொகுதி மக்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும் என்றால் ஆளும் கட்சி ஆதரவோடு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நிச்சயம் நல்லது செய்ய முடியும்.

அதன் அடிப்படையில் தான் த.வெ.க பொதுச்செயலாளரை சந்தித்தேன். என் மக்களுக்கான கோரிக்கையை நிறைவேற்றி தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

இசக்கி சுப்பையா
இசக்கி சுப்பையா

யாரிடமாவது பணம் வாங்கியிருக்கிறேன் என்று யாராவது சொன்னால் இப்போதே அரசியலை விட்டு விலகி விடுகிறேன். தற்போது இருக்கும் முதல்வர் மக்களுக்கு நல்லதை செய்வார் என்ற நம்பிக்கையோடு அவருடன் பயணிக்க நான் வந்திருக்கிறேன்.

ஆடு நனைகிறது என்று ஓநாய் வருத்தப்படுமா? குதிரைபேரம் என்றால் என்ன? இரவெல்லாம் சிந்தித்தேன். பதில் கிடைக்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மாதப்படி வழக்கு: `மீண்டும் ஆஜராகுங்கள்'-பினராயி விஜயன் மகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!

கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த சி.எம்.ஆர்.எல் தனியார் நிறுவனம் மற்றும் சி.பி.எம்...

'இனி இந்தியா உலக நாடுகளுக்கு சந்தை இல்லை' – மோடி | இந்திய கப்பற்படையில் 3 'Made in India' கப்பல்கள்

இந்திய கப்பற்படையில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மூன்று கப்பல்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தக்...

"திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால்கூட…" – பெ. சண்முகம் கருத்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், வருங்காலத்தில் அதிமுகவும்...

கேரளம்: புதிய மாவட்டங்கள் உருவாக்க திட்டம்; திரூர், மூவாற்றுப்புழாவில் முதற்கட்ட நடவடிக்கை!

கேரள மாநில நிர்வாகத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, புதிய மாவட்டங்கள்...