18
November, 2026

A News 365Times Venture

18
Wednesday
November, 2026

A News 365Times Venture

“தவெக-வின் 60 – 70 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்" – திமுக ரகுபதி சொல்லும் கணக்கு!

Date:

தவெக-வின் 60 – 70 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,“குதிரை பேரத்தில் (Horse-trading) ஈடுபட வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு ஒருபோதும் கிடையாது. வெளியே இருப்பவர்கள் வேண்டுமானால் நாங்கள் பணம் வைத்திருப்பதாக நினைக்கலாம். ஆனால், இன்றைக்கு யாரிடமும் சென்று பணம் கொடுத்து விலை பேசும் அளவுக்குத் தி.மு.க-விடம் பணம் கிடையாது. எனவே, குதிரை பேரத்திற்கு இங்கு வாய்ப்பே இல்லை. அதேசமயம், மற்றவர்களிடம் மனமாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தி தி.மு.க-விடம் உண்டு.

தவெக

இன்றைக்கு மக்களிடத்திலே ஏற்பட்டிருக்கிற மாற்றங்களைக் கண்டு, தவெக எம்.எல்.ஏ-க்கள் `நாமே ஒரு 60 அல்லது 70 பேர் ஒன்றிணைந்து தனியாக ஆட்சி நடத்தினால், ஒரு நல்ல ஆட்சியை வழங்க முடியும்’ என்கிற முடிவுக்கு வந்திருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. அ.தி.மு.க தரப்பிலிருந்து கூட `தவெக-வில் சுமார் 30 பேர் அதிருப்தியில் இருக்கிறார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இவை எதுவும் உறுதி செய்யப்பட முடியாத தகவல்களாக இருந்தாலும், இவ்வாறு அதிருப்தி அடைந்தவர்கள் வெளியே வந்து ஆட்சியைக் கைப்பற்றும்பொழுது, அங்கே ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில், தி.மு.க-வுக்கான வாய்ப்பும் உருவாகக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.
அதிருப்தியில் இருப்பவர்களை அழைத்துப் பேசி சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அவர்களுடைய மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 109 மட்டுமே. அதில் 60 பேர் வெளியே வந்துவிட்டால், அது மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேலாகிவிடும். இவ்வாறு பாதிக்கும் மேற்பட்டோர் வெளியே வரும்போது, `நாங்கள்தான் பெரிய கட்சி. அவர்கள்தான் பிரிந்து சென்றுவிட்டார்கள்’ என்று உரிமை கோருவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
அத்தகைய ஒரு அரசியல் சூழ்நிலை உருவாகும்பொழுது, அங்கே ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.

TVK Vijay | த.வெ.க - முதல்வர் விஜய்
TVK Vijay | த.வெ.க – முதல்வர் விஜய்

அல்லது, ஒன்றிய அரசின் பிரதிநிதியான ஆளுநர் தலையிட்டு சட்டமன்றத்தை முடக்கி வைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. சட்டமன்றம் இவ்வாறு முடக்கப்படுகிறபொழுது, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அல்லது ஆளுநர் ஆட்சிதான் அமலுக்கு வரும். அதனைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு யாருக்காவது வாய்ப்பு வழங்கப்படும். அப்படி எவராலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால், மீண்டும் பொதுத்தேர்தல் மட்டுமே ஒரே தீர்வாக அமையும்.

அந்தத் தேர்தலில் தி.மு.க நிச்சயமாக வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை எங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் முன்பை விட மிக மோசமான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதேனும் ஒரு துறையில் மட்டும் பிரச்சனை என்றால் கூடப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், இன்று அனைத்துத் துறைகளிலுமே மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகையைப் பொறுத்தவரை, நாங்கள் 1 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கினோம். ஆனால், தற்போது அதில் சுமார் 25 முதல் 30 லட்சம் பேருக்கு மேல் நிறுத்தப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. இது போகப் போக இன்னும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

ராகுல் காந்தி, விஜய்

கூட்டணி விவகாரத்தைப் பொறுத்தவரை, நாங்கள் அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. `வேண்டாம்’ என்று முடிவெடுத்து விட்டுவிட்டு வந்துவிட்டோம். தமிழ்நாட்டு மக்கள் எங்களைத் தாங்கிப் பிடிக்கத் தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இருந்தால்தான் எங்களைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை இல்லை. நாங்கள் எங்களுடைய சுமையை இறக்கி வைத்துவிட்டோம். எனவே, இனிமேல் நாங்கள் நிம்மதியாகப் பணியாற்ற முடியும். மேலும், த.வெ.க எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகளை எல்லா ஊர்களிலும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகளை மிரட்டும் போக்கில்தான் செயல்பட்டு வருகிறார்கள்.

அரசு அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் வரம்பு மீறிச் செயல்படுவதோடு, குறிப்பிட்ட அளவிற்குப் பணிகளை ஒதுக்குமாறு அதிகாரிகளை வற்புறுத்துகின்றனர். இத்தகைய சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் இதற்கு முன்பு எப்போதும் நடந்ததில்லை. அமைச்சருக்கு வேண்டியவர்கள் சொல்வதைக் கேட்பதா, மாவட்டச் செயலாளர் சொல்வதைக் கேட்பதா அல்லது சட்டமன்ற உறுப்பினர் சொல்வதைக் கேட்பதா? என்ற குழப்பத்தில் அரசு அதிகாரிகள் சிக்கித் தவிக்கின்றனர். அதிகாரிகளே சுயமாக முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் இத்தகைய சூழ்நிலையைத்தான் இந்த ஆட்சி உருவாக்கியுள்ளது. மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. ஆனால், எதற்கெடுத்தாலும் தி.மு.க மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் பழிபோடுவது ஒன்றை மட்டுமே ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அர்லேகர்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அர்லேகர்

எதைக் கேட்டாலும் அதற்குத் தி.மு.கதான் காரணம் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. ஆனால், இந்த ஆறு மாத காலத்திற்குள்ளேயே தமிழ்நாடு எந்த அளவிற்குச் சீரழிந்து போயிருக்கிறது என்பதைப் பாருங்கள். சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், சிறுமிகள் காணாமல் போகும் சம்பவங்கள் நடக்கின்றன. அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறுகிறது. இத்தகைய அக்கிரமங்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டாமா?

கள்ளக்குறிச்சி அருள் விக்னேஷ் விவகாரம் குறித்து விசாரிக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் மூலம் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்று நம்புகிறோம். மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கூட இது குறித்துத் தலைமைச் செயலாளருக்கும், டெல்லியில் உள்ள மத்திய பணியாளர் நலத்துறைக்கும் புகார் அனுப்பியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலால்தான், தமிழக ஆளுநரை அழைத்து தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு நிலைமை குறித்து இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சகம் விசாரித்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்பதற்கு இந்த விசாரணையே போதுமான எடுத்துக்காட்டாகும்.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைப் பற்றிப் பேச வேண்டாம். மனிதர்களைப் பற்றிப் பேசுவோம். அவர் மனிதரே அல்ல. டெல்லிக்குச் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர், மாநிலத்தின் நலனுக்காக ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் எப்போதும் எதையும் பேச மாட்டார். “பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்” என்பதுதான் அவருடைய நிலைப்பாடாக உள்ளது. டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அருகில்தான் அவர் இருந்தார். அவரிடம் மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வலியுறுத்தியிருக்கலாம். ஆனால், எதுவும் பேசாமல் வழக்கம்போல் மௌன சாமியாராகத் திரும்பி வந்துவிட்டார்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'சோனியாவுக்கு நான் வாழ்த்து சொல்லி இருக்கிறேன், ஆனால் எனக்கு அழைப்பிதழ்..!'- ஸ்டாலின் கூறியதென்ன?

திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். மேகதாது...

“தவெக-வின் பொறுப்பின்மை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல" – அண்ணாமலை காட்டம்!

காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத் தலைவர்...

கரூர்: சின்ன ஆண்டாங்கோவில் அருகில் குப்பை மேடு; சுகாதாரச் சீர்கேட்டைக் கண்டுகொள்ளாத நகராட்சி

கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் ஏரியாவின் பிரதான பகுதியான விநாயகர் கோயிலின்...