19
August, 2026

A News 365Times Venture

19
Wednesday
August, 2026

A News 365Times Venture

“தவெக-வின் 100 நாள் ஆட்சியில் 200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்" – அப்பாவு காட்டம்

Date:

தவெக ஆட்சி அமைத்து 100 நாள்களை எட்டியிருக்கிறது. இது தொடர்பாக இந்த அரசு மேற்கொண்ட சாதனைகளாக நேற்று முதல்வர் விஜய்-யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. சட்டமன்றத்திலும், இந்த 100 நாள் ஆட்சி குறித்து பேசப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் சபாநாயகர் அப்பாவு தன் எக்ஸ் பக்கத்தில், “தவெக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் தமிழகத்தில் சுமார் 200 கொலைகள், 10-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள், சுமார் 400 பாலியல் குற்றங்கள், தினம்தோறும் 2.5 வயது குழந்தை முதல் 85 வயது முதியவர் வரை பாலியல் வன்கொடுமை கொலைகள், 10-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் எனத் தமிழ்நாட்டைப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாற்றிய விஜய் அவர்களே! நினைவிருக்கிறதா?

முதல்வர் விஜய்

“ஓவ்வொரு காவல் நிலைய மரணமும் அந்த ஆட்சியின் தோல்வி” என உங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதை மறந்து உங்கள் தோல்வி ஆட்சித் தொடர வேண்டுமா CM sir? முதல்வரைச் சுற்றியுள்ள நான்கு நண்பர்களும் இயக்குநர்களாக உருவாகி, 100 நாட்களில் விஜய்யை வைத்து ரீல்ஸ் எடுத்து சீரியல் தயாரித்து முதல்வரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வாக்களித்த மக்களை ரீல்ஸ் பார்க்க வைத்திருப்பது மிகப்பெரிய அவமானமாக இல்லையா CM sir ?

நேற்று, 100-வது நாளில், போதைப்பொருள் பழக்கத்தைப் பற்றி காவல்துறைக்குத் தகவல் கொடுத்த அமுதன் மற்றும் தினேஷ் உள்ளிட்ட மாணவர்கள் போதைப்பொருள் கும்பலால் கொலை செய்யப்பட்டதற்குப் பொறுப்போடு எதிர்க்கட்சித் தலைவருக்கும், நாட்டு மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய முதல்வர், சினிமா பாணியில் தனக்குப் பதிலாக ‘டூப்’களை பதில் சொல்ல வைத்து தமிழகத்தையே தலைகுனிய வைத்துவிட்டு ஓடி ஒளிவது வெட்கமாக இல்லையா CM sir ?” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள...

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" – கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை...

"தவெக 10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால்…" – சவாலில் தோற்றதால் மீசையை மழித்த அதிமுக மாசெ

அ.தி‌.மு.க-வின் நீலகிரி மாவட்ட செயலாளராகத் தற்போது பதவி வகித்து வருகிறார் வழக்கறிஞர்...

`காக்ரோச், இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் `நோ' – தமிழக அரசின் சர்ச்சை உத்தரவும் உடனடி வாபஸும்

மாணவர்கள், காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் பங்கேற்பதைத்...