9
September, 2026

A News 365Times Venture

9
Wednesday
September, 2026

A News 365Times Venture

"தவெக-வினரே பெண்கள் மீது தவறான பதிவுகளைப் பதிவிடுகிறார்கள்" – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

Date:

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “காவல்துறை மானியக் கோரிக்கையில் மிக முக்கியமானக் கோரிக்கைகளை வரும் என தமிழ்நாட்டில் உள்ள லட்சகணக்கான தமிழ் மக்கள் குடும்பத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிரேமலதா விஜயகாந்த்

ஆனால் இன்று முதல்வரின் உரையில் காவல்துறைக்கான எந்த அறிவிப்பும் இல்லை. அதை நான் அவையில் சுட்டிக்காட்டினேன். இன்று மாலை சட்டசபை முடிவதற்குள் ஒட்டுமொத்த காவல்துறையினருக்கும் ஒரு நல்ல அறிவிப்பு வெளியாக வேண்டும்.

அதாவது பதவி உயர்வு, சம்பள உயர்வு, காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு நிரந்தர பதவி உயர்வு வழங்க வேண்டும். சைபர் க்ரைம் மிக மோசமாக நடந்துக்கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் பல்வேறு பதிவுகள் ஊடுருவி வருகின்றன. இதனை அரசு கவனத்தில் கொண்டு சைபர் க்ரைமை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்.

அதேபோல காவல் மரணத்தில் இறந்த சபரிவர்மன், அருணாசலம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிதி, வேலைவாய்ப்பை வழங்குவார்கள் என்று பார்த்தோம். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாமல் இருப்பது ஏமாற்றமாக இருக்கிறது.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மீது முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார். அதனை நான் வரவேற்கிறேன். தவெகவினரே பெண்கள் மீது தவறான பதிவுகளைப் பதிவிடுகிறார்கள். அதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' – உதயமானது தவெக தலைமையிலான புதிய கூட்டணி!

இன்று (செப்டம்பர் 9) பனையூரில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக் கட்சிகளின்...

TVK : 'அவப்பெயர் ஏற்படும்' – குழம்பி தெளிந்த விஜய் ; மாலை வெளியாகும் வேட்பாளர் அறிவிப்பு?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியிருக்கிறது. முதல் கட்சியாக...

`பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம்' – வெளியானது அரசாணை!

தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும்...

‘அதுவே பழகிடும்’ ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலைப் பழகிக்கொண்ட உலக நாடுகள்; இப்போது எப்படி சமாளிக்கின்றன?

அமெரிக்காவும், இஸ்ரேலும் நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பம் மிகுந்த ஏவுகணைகளை வைத்து, ஈரானை...