25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

தவெக வடக்கு மண்டல பூத் கமிட்டி கருத்தரங்கம் – வேலூரில் புஸ்ஸி ஆனந்தை களமிறக்கிய விஜய்!

Date:

மிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மண்டல பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் கடந்த மாதம் கோவையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வடக்கு மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களை ஒருங்கேயிணைத்து 2-ம் கட்ட பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் நடத்தத் திட்டமிட்டிருக்கும் த.வெ.க தலைவர் விஜய், அதற்கான இடம் தேர்வில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை களமிறக்கிவிட்டிருக்கிறார். முன்னதாக இன்று (26-5-2025) காலை, மேல்மருவத்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த புஸ்ஸி ஆனந்த் அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு வந்தார்.

புஸ்ஸி ஆனந்த்

ஆரணியில் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிறகு வேலூர் அருகிலுள்ள பள்ளிகொண்டா கந்தனேரிக்கு மாலை 6.30 மணியளவில் வந்தார். கந்தனேரியில், பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டிய விசாலமான இடத்தை கருந்தரங்கிற்காக தேர்வு செய்யலாமா? என்று பார்வையிட்டு வேலூர் மாவட்ட த.வெ.க நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார். பிறகு வேலூரில் இருந்து புறப்பட்டு சென்றார் புஸ்ஸி ஆனந்த். அப்போது, த.வெ.க-வின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மேற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வினோத் கண்ணன், மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இம்தியாஸ் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதுச்சேரி: “எனக்கு எதிராக பெரும் சதி நடக்கிறது!” – சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் பகீர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று காலை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அதன்...

அமைச்சர் மன்னிப்பு: “இனி இதுபோல நடக்கக் கூடாது" – மதுரையில் எம்.பி சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காத்திருப்போர் கூடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்...

`இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியம் இல்லை' – மாணவியின் கோரிக்கையை நிராகரித்த உ.பி. உயர் நீதிமன்றம்

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது அவர்களின் மத நம்பிக்கையாக இருந்து வருகிறது....

வர்த்தக விரிசலில் அமெரிக்கா, கனடா: இதில் யாருக்கு என்ன பிரச்னை? இது சரியாக வாய்ப்புகள் உண்டா?

"கனடா ஒரு மாநிலமாக இல்லாதபோதிலும், ஒரு அமெரிக்க மாநிலத்திற்கான அனைத்துப் பலன்களையும்...