11
June, 2026

A News 365Times Venture

11
Thursday
June, 2026

A News 365Times Venture

தவெக: “ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து…" – முதல்வர் விஜய்யைச் சாடும் டிடிவி தினகரன்

Date:

முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் தேர்தலை எதிர்க்கொண்டு வெற்றிப்பெற்றார். அதைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதிக்கான எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இந்த நிலையில், நேற்று திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அமுமுக தலைவர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “நேற்று திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில், மக்களின் நலத்திட்டங்கள் குறித்தோ, கடந்த மூன்று வாரங்களாக அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தோ முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில் அவரது சினிமா வசனங்களும், அடுக்குமொழி பேச்சுகளும், பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளன.

TVK Vijay

அரசு நிர்வாகத்தைச் சீரமைக்க ஆறு மாத கால அவகாசம் தேவை எனக் கோரும் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு, கொலை–கொள்ளை, லஞ்சம் கேட்டு மிரட்டுதல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம், மருத்துவமனைகளில் நிலவும் அவலங்கள் போன்ற சட்டம்–ஒழுங்கு மற்றும் மக்கள் நலன் சார்ந்த அவசர பிரச்னைகளுக்கு அந்தக் கால அவகாசம் பொருந்தாது என்பது தெரியாதா?

தவெக-வுக்காக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள் கூட இன்று நியூஸ் பார்க்கும் நிலையில் உள்ளார்கள் என்று கூறும் திரு. ஜோசப் விஜய் அவர்கள் ஒவ்வொரு நாளும் சந்தி சிரித்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் அந்த நியூஸ்களில் வருவதை பார்ப்பதில்லையோ என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுகிறது.

மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், குறு மற்றும் சிறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முந்தைய அரசுகள் விட்டுச் சென்ற கடன் சுமையைக் காரணம் காட்டி அரைகுறையாகத் திட்டங்களைச் செயல்படுத்தி, பொதுமக்களையும் விவசாயிகளையும் வஞ்சித்து வருகிறார்.

josep vijay

தேர்தலுக்கு முன்பே தமிழகத்தின் கடன் சுமை சுமார் பத்து லட்சம் கோடி ரூபாயாக இருப்பது தெரிந்திருந்தும், அதைக் கருத்தில் கொள்ளாமல் நடைமுறைக்குச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் என்ன செய்ய முடியுமோ? அதைத்தான் செய்ததாகக் கூறியுள்ள முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தனது சுய விளம்பரத்திற்காக மட்டுமே அறிவித்த இந்த விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பைப் பார்க்கும்போது, வரும் காலங்களில் இவர் எந்த லட்சணத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறார் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது என விவசாயிகள் வேதனையைத் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், அல்லு சில்லுகளின் ஆதரவோடு தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டு, அது போதாது எனத் தீர்ந்த சக்திகள், மற்றும் பலரின் சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேர அரசியலைக் கையாண்டு, அவர்களில் சிலரை ராஜினாமா செய்ய வைத்ததோடு அவர்கள் அனைவரையும் சட்ட சிக்கலில் நிறுத்தியிருப்பதை என்னவென்று சொல்ல? இது தூய சக்தி அரசியலா? அல்லது குதிரை பேர அரசியலா?

அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன்
அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன்

ஆகவே, கடந்த ஆட்சியாளர்கள் வாங்கிய கடனையும், நிர்வாக சீர்கேடுகளையுமே காரணங்களாக அடுக்கி, தனது ஆட்சியை நிறைவு செய்து விடலாம் என நினைத்தால் இந்த ஆட்சியாளர்களின் போலி தூய சக்தி வேடத்தை தாங்களாகவே கலைக்கும் முன்னர், மக்கள் கலைத்துவிடுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'பிரசவ டாக்டர் இல்லை; தாயின் வயிற்றிலேயே உயிரிழந்த கண்ணகி நகர் குழந்தை!' – உலுக்கும் Spot Report!

`எங்க குழந்தை இந்த உலகத்தை பார்க்குறதுக்கு முன்னாடியே கொன்னுட்டாங்களே....ஏழைங்க உசுருன்னா இவங்களுக்கு...

விழுப்புரம்: மீனவப் பெண்கள் தூக்கு மாட்டும் போராட்டம்; போலிசாருடன் மோதல் | Photo Album

“கடல் பசுவுக்காக மீனவர் வாழ்வாதாரத்தை சிதைக்கலாமா?” - கொதிக்கும் மீனவர்கள்! Source...

ம.பி: பாஜக-வுக்குச் சாதகமாக மாறிய களம்? – காங்கிரஸ் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணி?

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின்...