தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், தவெக-வால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
இதற்கு ஆளுநர் தரப்பில் காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும் என்பதுதான் அரசியலமைப்புக் கொடுக்கும் வழிகாட்டல். எனவே, ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவை எதிர்த்து விஜய் தரப்பு நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜயுடன் அழகிய தமிழ் மகன் (2007) திரைப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தவெக கட்சி 108 இடங்களை வென்றுள்ளது. அவர்கள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை மறுப்பது, தமிழ்நாட்டு மக்களின் மக்கள் தீர்ப்பிற்கு இழைக்கப்படும் அவமதிப்பாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட 233 உறுப்பினர்களால் இன்னும் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள இயலாத நிலையில், இது மாநிலத்திற்கு இழைக்கப்படும் அவமானம் மட்டுமல்ல; ஜனநாயகத்திற்கே விழுந்த ஒரு பேரிடியும் ஆகும்.” என்ற கமல் சொன்ன செய்தி பதிவைப் பகிர்ந்துள்ளார்.




