21
July, 2026

A News 365Times Venture

21
Tuesday
July, 2026

A News 365Times Venture

“தவெக எம்எல்ஏ-க்கள் திமுக-வுக்கு வருவாங்க; 6 மாசத்துல ஆட்சி மாற்றம் நடக்கும்" – அனிதா ராதாகிருஷ்ணன்

Date:

தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, “எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் வழிநடத்தப்பட்ட அதிமுகவை யாராலும், குறிப்பாக தவெக-வால் அழித்துவிட முடியாது. அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஓடலாம். ஆனால் உண்மையான தொண்டர்கள் இயக்கத்திலேயேதான் இருப்பார்கள்.

எவரை ஒழித்தால் சரியாக இருக்கும் என்பது தொண்டர்களுக்குத் தெரியும். எனவே, அந்த அ.தி.மு.க தொண்டர்கள் விரைவில் தி.மு.க-வுடன் கைகோர்ப்பார்கள். இன்னும் ஆறு மாத காலத்தில் தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க-வின் ஆட்சி மலரும்.

அனிதா ராதாகிருஷ்ணன்

எந்த ஒரு சக்தியாலும், எந்தக் கொம்பனாலும் தி.மு.க-வைத் தொட்டுப் பார்க்கவோ அல்லது அசைத்துப் பார்க்கவோ முடியாது என்பதுதான் வரலாறு. அதைத் தற்போதும் நிரூபித்துக் காட்டுவோம். தற்போதைய சூழலில் த.வெ.க எம்.எல்.ஏ அனைவரும் எப்போது அக்கட்சியை விட்டு வெளியேறலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தி.மு.க-வைக் காட்டி அவர்களைப் பயமுறுத்தி வருகிறது. இரண்டே மாதத்தில் இந்தக் கட்சி விளங்காது என அவர்களே வருவார்கள். நாங்கள் யாரையும் கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை, அவர்களாகவே தானாக முன்வந்து தி.மு.க-வில் இணையப் போகிறார்கள்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின்...

“முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" – நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும்...

பழநி கோயில் நில மோசடி: `அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் உடன்பாடில்லை' – பெ.சண்முகம்

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை....