16
May, 2026

A News 365Times Venture

16
Saturday
May, 2026

A News 365Times Venture

தவெக: அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கீடு; இன்று பட்டியல் வெளியாகுமா?| News Today Live Update

Date:

தமிழக அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கீடு – இன்று மாலை வெளியாக வாய்ப்பு!

ஆளுநர் அர்லேகர் – விஜய்

புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், நிர்வாகக் குளறுபடிகளைத் தவிர்க்கும் பொருட்டு மிக முக்கியத் துறைகள் யாருக்கு ஒதுக்கப்படவுள்ளன என்பது குறித்த இறுதி கட்ட ஆலோசனைகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுக்கிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று மாலை வெளியாகும் எனக் கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதலுக்குப் பிறகு, எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் அடங்கிய பட்டியல் முறைப்படி ஆளுநர் மாளிகைலிருந்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க-வின் எந்தவொரு பிரிவையும் சேர்க்கக் கூடாது!

கார்த்திக் சிதம்பரம்

தமிழக மக்கள் ஒரு மாற்றத்திற்காகவே தவெகவுக்கு வாக்களித்துள்ளனர் என்பதால், அ.தி.மு.க-வின் எந்தவொரு பிரிவையும் இந்த புதிய அரசில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அ.தி.மு.க-வைச் சேர்த்துக் கொள்வது புதிய அரசின் இமேஜுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். தவெக தோழமைக் கட்சிகளின் ‘எய்ட் அண்ட் அசிஸ்டென்ஸ்’ (Aid and Assistance) மூலமாகவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை சுமுகமாக நடத்த முடியும். – காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம்

சிறப்பான ஆட்சியை நிச்சயம் வழங்குவார்

சௌந்தர்யா ரஜினிகாந்த்
சௌந்தர்யா ரஜினிகாந்த்

விஜய் அண்ணாவின் இந்த வெற்றி மிக முக்கியமான ஒரு வரலாற்று வெற்றியாகும். அவர் தமிழக மக்களுக்கு நல்லது செய்வார் என்று மக்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். விஜய் அண்ணாவிற்கும், அவரது தவெக தொண்டர்களுக்கும் எனது குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பல சவால்களைக் கடந்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளார், இனிமேலும் சவால்கள் வரக்கூடும். ஆனால், மக்கள் மத்தியில் அவர் தனது சிறப்பான ஆட்சியை நிச்சயம் வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உள்ளது. – சௌந்தர்யா ரஜினிகாந்த்

யாரை வைத்து கட்சி?

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

எடப்பாடி எவ்வித விசாரணையும் இன்றி கட்சியினரை நீக்கியுள்ளார். இப்படி முக்கியப் புள்ளிகளை எல்லாம் நீக்கிவிட்டு அவர் யாரை வைத்து, எப்படி கட்சியை நடத்தப் போகிறார். நீக்கப்பட்டவர்கள் அனைவரும் தொண்டர்களுக்காக உழைத்தவர்கள். இந்த நீக்கம் சட்டரீதியாகச் செல்லாது என்று சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்துத் தெரிவித்துள்ளனர் என அதிமுக எம்.எல்.ஏ கே.சி.வீரமணி தெரிவித்திருக்கிறார்.

நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்தம்!

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை

லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், ஏற்கனவே அமலில் உள்ள போர் நிறுத்தம் மேலும் 45 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் செய்தியாளர்களிடம், “இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையில் மேற்கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் காண்பதற்கு ஏதுவாக, கடந்த ஏப்ரல் 16-ம் தேதி அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்த முதல்வர்” – பதவியேற்பு விழா எப்போது?

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு...

"வென்டிலேட்டருடன் கூடிய ஐ.சி.யூ வார்டுகூட இல்லை என்பது வேதனை!" – ஸ்ரீரங்கம் த.வெ.க எம்.எல்.ஏ

தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், ஸ்ரீரங்கம்...

சீனா கொடுத்த பரிசுப்பொருட்களை குப்பை தொட்டியில் போட்ட அமெரிக்க அதிகாரிகள்; காரணம் என்ன தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீனாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் தன்னுடன்...

அதிமுக: "எடப்பாடி பழனிசாமிதான் இப்போதும் பொதுச்செயலாளர்; ஆனால்…" – கே.சி. வீரமணி சொல்வது என்ன?

அ.தி.மு.க இரண்டாகப் பிளவுப்பட்டுள்ள நிலையில், அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஜோலார்பேட்டை...