11
June, 2026

A News 365Times Venture

11
Thursday
June, 2026

A News 365Times Venture

‘தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா?’- வானதி சீனிவாசன் கேள்வி!

Date:

பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் காலியான ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் ஒதுக்கியுள்ளது. இது அவர்களது விருப்பம். ஆனால், கூட்டணிக் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் ஜோசப் விஜயை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கூட்டணி பேரம் பேசியிருக்கிறார்.

விஜய்

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இப்போது கூட்டணி பேச்சுவார்த்தையும் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இதனால் சென்னை கோட்டையில் இருப்பது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமா? அல்லது தவெக தலைமை அலுவலகமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'பிரசவ டாக்டர் இல்லை; தாயின் வயிற்றிலேயே உயிரிழந்த கண்ணகி நகர் குழந்தை!' – உலுக்கும் Spot Report!

`எங்க குழந்தை இந்த உலகத்தை பார்க்குறதுக்கு முன்னாடியே கொன்னுட்டாங்களே....ஏழைங்க உசுருன்னா இவங்களுக்கு...

விழுப்புரம்: மீனவப் பெண்கள் தூக்கு மாட்டும் போராட்டம்; போலிசாருடன் மோதல் | Photo Album

“கடல் பசுவுக்காக மீனவர் வாழ்வாதாரத்தை சிதைக்கலாமா?” - கொதிக்கும் மீனவர்கள்! Source...