27
August, 2026

A News 365Times Venture

27
Thursday
August, 2026

A News 365Times Venture

`தம்பி ஆதவ், நீ எழுந்தா தான் சண்டை வருது; 8-ம் தேதி வரைக்கும் பேசாதீங்க..!'- பிரேமலதா

Date:

சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ ராஜாவுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே ஏற்பட்ட காரசார வாக்குவாதத்தைக் கண்டித்த பிரேமலதா விஜயகாந்த், “இது சட்டமன்றமா? சண்டை மன்றமா? மானியக் கோரிக்கையை தவிர எல்லா நிகழ்ச்சியும் நடக்கிறது.

அவர் பேச ஆரம்பிக்கும் வரை நன்றாக செல்கிறது. அவர் பேச ஆரம்பித்தாலே சண்டைதான்” என்று ஆதவ் அர்ஜுனாவை நோக்கி பேசினார்.

அதற்கு ஆதவ் அர்ஜுனா, “அண்ணியாருக்கும் எங்களுக்கும் பிரச்னை கிடையாது. எங்களுக்கும் விஜயகாந்த் சாரை ரொம்ப பிடிக்கும். உண்மைக்கு மாறாக பேசும் போதுதான் நாங்கள் எழுந்திருக்கிறோம்.

ஆதவ் அர்ஜுனா

எதிர்க்கட்சி என்பது தீப்பெட்டி போன்றது. அதை பற்றவைத்து பால் காய்ச்சினால் அமைதியாக இருப்போம். கேஸை பிடுங்கிவிட்டு பற்ற வைத்தால் வெடிக்கும்” என்றார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “நான் தம்பி ஆதவ் அர்ஜுனாவிடம் நேரடியாகவே சொல்லிவிட்டேன். ‘தம்பி நீ எழுந்தா தான் சண்டை வருது’ என்று… செப்டம்பர் 8 ஆம் தேதி வரை பேசாதீர்கள்.

சட்டமன்றம் நல்லபடியாகப் போய் கொண்டிருக்கும். ஆனால் ஆதவ் அர்ஜுனா எழுந்தால் சட்டமன்றம் 4 மணி நேரம் சண்டையில் போய்விடுகிறது. நேரம் வீணாகிறது.

உங்களுக்கு தனிப்பட்ட கருத்துகள் இருந்தால் பொதுக்கூட்டத்தில் பேசுங்கள். இல்லையென்றால் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுங்கள். சட்டமன்றத்தில் பேசாதீர்கள்.

சபாநாயகரிடமும் கூறிவிட்டேன் இனி ஆதவ் அர்ஜுனாவுக்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள் என்று… ஆதவ் அர்ஜுனா பேசட்டும், அவருக்கு எதிராக நான் இல்லை. நீங்கள் (தவெகவினர்) உங்கள் கருத்தை சொல்லுங்கள். அவர்கள் (திமுகவினர்) கருத்தை அவர்கள் சொல்லட்டும். விவாதம் எல்லாம் முடித்துவிட்டு மக்கள் பிரச்னைக்கு வந்துவிடுங்கள்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தொடர்ந்து சண்டை… சண்டை… சண்டை தான். இவர்கள் அவர்களைக் குறை சொல்ல அவர்கள் இவர்களைக் குறை சொல்ல இப்படியே நடந்துக்கொண்டிருந்தால் இதற்காகவா சட்டமன்றத்திற்கு வருகிறோம். மக்கள் நம்மை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

தொகுதிப் பற்றி நாம் என்ன பேசுகிறோம் என்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சட்டமன்றத்தில் தொகுதி எம்எல்ஏக்கள் தொகுதிக்காக எதுவும் பேச மாட்டார்கள் என கவலைப்படுகிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`சட்டமன்றம் தனிநபர் மோதல்கள் நிறைந்த 'டிராமா மன்றமாக' மாறிவிடக் கூடாது!' – அண்ணாமலை

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'வீ தி லீடர்ஸ்'...

'விமர்சித்த உதயநிதி; மாலையில் திடீரென அவைக்குள் வந்த முதல்வர் விஜய்!' – பின்னணி என்ன?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், முதல்வர்...

`அரசுக்கு திமுக பஞ்சபாண்டவர்களாக துணை நிற்கும்!' – புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய...

'இது சட்டமன்றமா… இல்ல சண்டை மன்றமா?' – திடீரென கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவின் சட்டமன்ற உறுப்பினரான பிரேமலதா அவையில் திடீரென, 'இது சட்டமன்றமா இல்லை...