புதியக் கல்விக் கொள்கையின் மூலம் மத்திய பா.ஜ.க அரசு இந்தி மொழியை திணிக்கிறது என்றக் குற்றச்சாட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களால் முன்வைக்கப்படுகிறது. புதியக் கல்விக் கொள்கையின் வழியே இந்தி திணிக்கப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக பா.ஜ.க – திமுக இடையே கடும் விவாதம் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், ஜோஹோ
ஸ்ரீதர் வேம்பு தன் எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவில் ஜோஹோ வேகமாக வளர்ந்து வருவதால், தமிழ்நாட்டில் கிராமப்புற பொறியாளர்கள் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள வாடிக்கையாளர்களுடன் பணியாற்றுகிறார்கள். எங்கள் வணிகத்தின் பெரும்பகுதி இந்த நகரங்களிலிருந்தும், குஜராத்திலிருந்தும் இயக்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சிறப்பாக சேவை செய்வதையே சார்ந்துள்ளது. இந்தி தெரியாமல் இருப்பது பெரும்பாலும் தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒரு பெரிய குறைதான். ஆனால் இந்தி கற்றுக்கொள்வது எங்களுக்கு புத்திசாலித்தனம். கடந்த 5 ஆண்டுகளில் நான் இந்தியை இடைவிடாமல் படிக்கக் கற்றுக்கொண்டேன், இப்போது பேசப்படும் விஷயங்களில் சுமார் 20% என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்வதில் புத்திசாலிகளாக இருப்பார்கள். அரசியலைப் புறக்கணித்து, மொழியைக் கற்றுக்கொள்வோம்! இந்தி கற்றுக்கொள்வோம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.