5
June, 2026

A News 365Times Venture

5
Friday
June, 2026

A News 365Times Venture

தமிழ்நாடு மின்வாரியத்தில் முக்கிய ஹார்டு டிஸ்க்குகள் மிஸ்ஸிங்! – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

Date:

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் கடந்த மே 16, 17-ம் தேதிகளில் கிட்டத்தட்ட 18 ஹார்டு டிஸ்குகளட்திருடு போனது.

இது குறித்து தற்போது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டுக் குறித்து சென்னையில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்தார்…

“தமிழ்நாடு மின்வாரியத் தலைமை அலவலகத்தில் பல ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போனதாக போன மாதம் ரிப்போர்ட் செய்யப்பட்டது.

தமிழ்நாடு மின்சார வாரியம்

அதனால், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருக்கும் விஜிலென்ஸ் முதல் கட்டமாக விசாரணை நடத்தினர். அதன் பின், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது. ஒரு சிலரை கைது செய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் நான் பேசினால் சரியாக இருக்காது.

தலைமை அலுவலகத்தில் தற்போது உள்ள அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப்பட உத்தரவிடப்பட்டிருக்கிறது.

கம்ப்யூட்டரில் இருக்கும் அனைத்து டேட்டாக்கள், சென்சிட்டிவ் தகவல்கள் மற்றும் ஆவணங்களையும் பேக் அப் எடுத்து வைக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகால டெண்டர், ஆவணங்கள், கான்ட்ராக்ட் ஊழியர்கள், நிலக்கரி வாங்கியது என அனைத்து தரவுகளுமே பேக் அப் எடுக்கக் கூறப்பட்டிருக்கிறது.

இது மட்டுமல்லாமல், டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் குறித்த ஆவணங்களை ஏற்கெனவே சி.பி.ஐக்கு கொடுத்துவிட்டோம். இதன் தொடர்ச்சியாக, சிலர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்கள்.

அந்தச் சஸ்பெண்டுகளுக்குப் பிறகு, இந்தத் திருட்டு நடந்திருக்கோமோ என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை அனைத்தையுமே காவல் துறை விசாரித்து வருகிறார்கள்”. என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதில் அரசின் நிலைப்பாடு என்ன? – உயர் நீதிமன்றம் கேள்வி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற நடவடிக்கை...

முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம்! – என்னவெல்லாம் விவாதிக்கப்படலாம்? | Live Updates

மாநிலங்களவைத் தேர்தல் - பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிப்பு! தமிழ்நாட்டில்...

குன்னுர்: CM விஜய் புகைப்பட விவகாரம்: 3 முதல்வர்களின் படங்களையும் மாட்டிய கவுன்சிலர்கள்!

தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றிருக்கும் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, முதலமைச்சரின்...

டெல்லியில் முகாமிட்டுள்ள அண்ணாமலை; நயினாரிடம் தலைமை கேட்ட கேள்விகள்! – சென்னையில் அதிரடி அறிவிப்பு?

தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் 'அண்ணாமலை...