20
September, 2026

A News 365Times Venture

20
Sunday
September, 2026

A News 365Times Venture

"தமிழ்நாடு, சர்க்கஸ் கும்பலிடம் மாட்டிக்கொண்டிருக்கிறது.!"- உதயநிதி ஸ்டாலின்

Date:

சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார்.

திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரங்களை மென்மேலும் வலுப்படுத்துவோம்… என்றும் களத்தில் நின்று தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்திடுவோம்.

முதல்வர் விஜய்

திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இருக்கும் உறவு, இன்று நேற்று உருவானது அல்ல. மறைந்த கண்ணியமிகு காயிதே மில்லத் காலத்தில் உருவான உறவு. இந்த உறவு நாளுக்கு நாள் வலிமையாகி கொண்டே போகிறது. இன்றைக்கு தமிழ்நாடு என்ன நிலைமையில் இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

திராவிட மாடல் ஆட்சியில் நல்ல நிலையில் இருந்த தமிழ்நாடு, தற்போது சர்க்கஸ் கும்பலிடம் மாட்டிக்கொண்டுள்ளது. சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பது மக்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

நம் கழகத் தலைவர், “ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டி.. ஒன்னு மின்வெட்டு.. இன்னொன்னு அரிவாள் வெட்டு..” என்று கூறியதுபோலத் தான் தமிழ்நாடு இருக்கிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்பதையே தவெகவினர் இன்னும் நம்பவில்லை.. எதற்கெடுத்தாலும் முந்தையை ஆட்சி மீது பழி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“ஸ்டாலின், பி.டி. ஆர்… தோற்றார்களா அல்லது தோற்கடிக்கப்பட்டார்களா?" – நடிகர் பிரகாஷ் ராஜ்

த.வெ.க ஆட்சி சரியில்லை என்றால், நான் கேள்வி கேட்பேன் என நடிகர்...

`பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி' பாஜக தலைவர்கள் கண்டனம்! – என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்)...

தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல்: “இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுமா?" – கராத்தே தியாகராஜன் கேள்வி

தவெக ஆட்சி அமைத்ததற்குப் பிறகு அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் சிலர் தங்கள் பதவியை...

“தமிழ்நாட்டில் இப்போது பல பவர் சென்டர்கள் உருவாகிவிட்டன" – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ்...