14
April, 2026

A News 365Times Venture

14
Tuesday
April, 2026

A News 365Times Venture

"தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்றவர்தான் பொன்.ராதாகிருஷ்ணன்"- கனிமொழி கடும் தாக்கு!

Date:

கன்னியாகுமரி தொகுதி தி.மு.க வேட்பாளர் மகேஷ், நாகர்கோவில் தி.மு.க வேட்பாளர் ஆஸ்டின், குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் உள்ளிட்டோரை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார். குளச்சலில் கனிமொழி எம்.பி பேசுகையில், ​”குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் மக்களுக்காக போராடக்கூடிய வேட்பாளர். நம்முடைய முதல்வர் மக்களுக்கு தந்திருக்கக்கூடிய வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி தந்திருக்கிறார். அந்த உரிமையோடு வாக்கு கேட்கிறோம். ​அந்த உரிமையோடு தான் இங்கே இருக்கக்கூடிய சகோதரிகள் இந்த கூட்டத்திலே கலந்து கொண்டு மறுபடியும் தமிழ்நாட்டில் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலே கொண்டு வந்திருக்கிறீர்கள். அதே நேரத்திலே சகோதரிகளுக்குத் தனியாகத் தந்த மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயை இப்பொழுது ஒரு கோடியே 15 லட்சம் பேருக்குத் தந்திருக்கிறார் முதல்வர். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அது 1000-லிருந்து 2000-ஆக உயர்த்தி வழங்கப்படும். நம்முடைய இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் 35 லட்சம் மாணவர்களுக்கு அடுத்த 5 வருடத்தில் லேப்டாப் வழங்கப்படும். அரசுப் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லக்கூடிய இளைஞர்களுக்கு, இளம்பெண்களுக்குப் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் வாயிலாக 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. மறுபடியும் ஆட்சிக்கு வந்தவுடனே அது 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். யாருக்கு எது தேவை என்று சிந்தித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. முதியோர்கள், வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு வீடு தேடிப் போய் ரேஷன் பொருட்களைத் தரக்கூடிய தாயுமானவர் திட்டத்தைத் தந்திருக்கிறோம். ஒரு வீடு கூட தமிழ்நாட்டிலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியால் பயன்பெறாத ஒரு வீடு இருக்கு எனச் சொல்ல முடியாத அளவிற்கு எல்லோருக்குமான ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குளச்சல் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட்டை ஆதரித்து கனிமொழி பிரசாரம்

இந்த தேர்தல் என்பது தமிழகத்திற்கும் என்.டி.ஏ-வுக்குமான தேர்தல்.  ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய எந்தத் திட்டத்தையும் தரவில்லை. தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியையும் தரவில்லை. இங்கிருந்து வரியை அள்ளிக்கொண்டு போறாங்க, நிதியை கிள்ளிக்கூட தரமாட்டேங்கிறாங்க. இங்கே புயல், வெள்ளம், மழை என்று எது வந்தாலும் நிவாரணத்தை வழங்காத பா.ஜ.க,

​நம்ம வீட்டுப் பிள்ளைகள் படிக்கிறதுக்குத் தர வேண்டிய 3600 கோடி ரூபாயை நிறுத்தி வைத்துக்கொண்டு, நீங்க ஹிந்தி படிச்சாதான் கொடுப்பேன் அப்படின்னு சொல்கிறார்கள். இவர்களோடுதான் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த முழு கூட்டணியுமே தமிழ்நாட்டிற்கு எதிரான கூட்டணி. பிரதமர் மோடி எதைச் செய்தாலும் எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து எதையுமே கேட்க மாட்டார். இஸ்லாமிய மக்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வந்தபோது வாய் திறக்கவில்லை. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வந்தபோது வாய் திறக்கவில்லை. தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வந்தபோது வாய் திறக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு எதிரானவர்கள் யார் என்பது இந்தத் தேர்தலிலே அடையாளம் கண்டுகொண்டு வாக்களியுங்கள்.

பிரசார கூட்டம்

கீழடி என்பது தமிழர்களுடைய தாய்மடி. நாக்பூர் என்பது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் தலைநகரம். இது கீழடிக்கும் நாக்பூருக்குமான தேர்தல் என்பதை உணர்ந்து நாம் சரியானபடி வாக்களிக்க வேண்டும். அவர்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு சரியான பாடத்தைச் சொல்லித் தர வேண்டும். நாடாளுமன்றத்திலேயே ஒரு அமைச்சர் தமிழர்களை நாகரிகம் அற்றவர்கள் என்று கொச்சைப்படுத்துகிறார். ஒடிசா தேர்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா, தமிழர்கள் எல்லாம் இங்கே ஆட்சி செய்ய வந்துவிட்டால் நாங்கள் என்ன செய்வது? ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஒடிசாவில் தமிழர்களுக்கு இடம் கிடையாது என்றும் சொல்லக்கூடிய வகையிலே பேசியிருக்கிறார். பிரதமர் அதை விட ஒரு படி தாண்டிப் போய் ஒடிசா பூரி ஜெகன்னாதர் கோயிலில் இருக்க வேண்டிய சாவி தமிழ்நாட்டிற்குப் போயிருச்சு என்கிறார். தமிழர்கள் எல்லாம் போய் அங்க இருக்கக்கூடிய பொருள்களை களவாடிக்கொண்டு வந்ததைப் போலப் பேசியிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி இங்கே இருக்கக்கூடிய பொன்.ராதாகிருஷ்ணன் தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்றார். பிரதமர் வந்து தமிழைப் பற்றிப் பாராட்டிப் பேசுகிறாராம் அதற்கு நாம் நன்றிக் கடன் செலுத்த வேண்டுமாம். ​தமிழ் உயர்ந்த மொழி, தொன்மையும் தொடர்ச்சியும் இருக்கக்கூடிய மொழி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக என் மூதாதையர்கள் பேசிய மொழியை நான் இன்றும் பேசுகிறேன். அது நம்முடைய பெருமை. அதை பேசக்கூடியவர்களுக்குத்தான் பெருமையே தவிர நீங்க பேசுறீங்கன்னு நான் பெருமைப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

குளச்சலில் கனிமொழி பிரசாரம்

இந்த ஆட்சியில் குளச்சல் பேருந்து நிலையம் கட்டித் தந்திருக்கிறார்கள். குளச்சல் துறைமுகத்திலே பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முட்டம் கடற்கரையை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கடலோரப் பகுதிகளில் மீன்பொருளாதார சிப்காட் பூங்காக்கள் உருவாக்கப்படும். மீன்பிடி தடைகால நிவாரணம் 8,000-லிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். முதலமைச்சர் கலைஞர் தொலைக்காட்சி கொடுத்தார்கள், இன்னைக்கு வரைக்கும் ஓடுகிறது. ​இப்பொழுது நம்முடைய முதலமைச்சர் அறிவித்த கூப்பனை கொண்டு போய் உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கக்கூடிய கடையில கொடுத்து உங்களுக்கு என்ன தேவையோ அதை வாங்கிக்கொள்ளலாம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'டார்கெட் 1 லட்சம் வாக்குகள்!' – பெரம்பூரில் வெல்வாரா விஜய்? |களநிலவரம் ஓர் அலசல்!

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில்...

VIP பணிகளுக்காக முடக்கப்பட்ட ஆம்புலன்ஸ்?: 'பறிபோன ஊடகவியலாளர் உயிர்' – பகீர் குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேசத்தில் 'ஸ்வர்ண் மங்கலம்' (Swarn Mangalam) என்ற மாத இதழின்...

பணி மாறுதலுக்கு பணம் வாங்கும் முறை ஒழிக்கப்படும்; திருப்பூரில் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் என்ன?

தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மக்கள்...

பீகார் அரசியலில் புதிய சகாப்தம்: முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சவுத்ரி – பின்னணி என்ன?

பீகாரில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த நிதிஷ் குமாரின் ஆட்சி நிறைவுக்கு...