5
October, 2026

A News 365Times Venture

5
Monday
October, 2026

A News 365Times Venture

"தன் பக்க நியாயத்தை சொல்லவிடாமல் வாக்காளர் பெயரை நீக்குவது சட்ட விரோதமானது" -உச்ச நீதிமன்ற நீதிபதி

Date:

இந்தியாவில் தற்போது சிறப்புத் தீவிரத் திருத்தம் தீவிரப் பேச்சுப் பொருளாக ஆகி வருகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்து தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி, ‘எங்களிடம் கேட்காமல் முடிவுகள் எடுக்கப்பட்டன’ என்று போர்க்கொடியைத் தூக்கியிருக்கின்றனர்.

இன்னொரு பக்கம், லட்சக்கணக்கான மக்களின் பெயர் இந்தத் திருத்தத்தின் கீழ் வாக்காளர் பதிவிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர்.

SIR – சிறப்பு தீவிர திருத்தம்

உஜ்ஜல் புயான் என்ன சொல்லியிருக்கிறார்?

இந்த நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியான உஜ்ஜல் புயான் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

அவர் எந்தப் பெயரையும் குறிப்பிடாமல், “ஒரு குடிமகன் வாக்காளராக இருப்பதும், தனது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதும் மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

இதுவே சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களின் அடித்தளமாகும்.

சம்பந்தப்பட்ட வாக்காளருக்குத் தன் தரப்பு நியாயத்தைக் கூறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்பட வேண்டும்.

இரண்டு வகையான குடிமக்களா?

இறந்தவரின் பெயரை நீக்குவது தவிர, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட எந்தவொரு குடிமகனின் பெயரையும், உரிய முன்னறிவிப்பும் நேரடி விசாரணையும் இன்றி நீக்க முடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இரண்டு வகையாகக் குடிமக்களைப் பிரிக்கவில்லை. அதாவது, வாக்களிக்கும் உரிமை உள்ள ஒரு பிரிவு குடிமக்கள், வாக்களிக்கும் உரிமை அற்ற மற்றொரு பிரிவு குடிமக்கள் என இங்கு எந்தப் பாகுபாடும் இல்லை.

இந்தியக் குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பது, எனது பார்வையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்துகள் 326 மற்றும் 14-ஐ முற்றிலும் மீறுவதாகும்.

வாக்கு
வாக்கு

சட்டவிரோதமானது

மில்லியன் கணக்கான இந்தியக் குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்து, அவர்களைச் சொந்த நாட்டிலேயே வாக்களிக்கும் உரிமையற்ற இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றும் எந்தவொரு நடவடிக்கையும் அடிப்படையிலேயே தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதும் ஆகும்” என்று பேசியிருக்கிறார் உஜ்ஜல் புயான்.

உஜ்ஜல் புயான் இந்தப் பேச்சை ஹைதராபாத்தில் நடந்த 19-வது NALSAR நீதிபதி பி.ஆர். சாவ்னி நினைவு நிகழ்வில் பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: அனல் பறந்த இறுதிகட்ட பிரசாரம்!

துணை ராணுவத்தினர் அணிவகுப்பு துணை ராணுவத்தினர் அணிவகுப்பு Source link

CJP: `என்னையும், அபிஜீத், அசுதோஷ் போன்றவர்களையும் கைது செய்ய திட்டம்' – சௌரவ் தாஸ் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர...

`அவர்கள் அப்போதே கிளம்பிவிட்டார்களே.!" – அமெரிக்காவுக்கு ஈரான் அமைச்சர் அராக்சி பதிலடி

ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பும்...